சாத்தான்குளம் வட்டாரத்தில் அரசு உதவி பெறும்
பள்ளிகள் 92 உள்ளன. இப்பள்ளிகளில் 250–க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி
வருகின்றனர். தற்போது ஆன்லைனில் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய
நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்
வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் ஏற்றப்படாததால் மே மாதம் சம்பளம்
வழங்கப்படவில்லை. சம்பளம் பெறாத அரசு உதவி பெறும் ஆசிரியர்கள்
சாத்தான்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் முறையிட்டனர்.அப்போது கல்வி
அதிகாரி உங்கள் பணி விபரம் ஆன்லைனில் ஏற்றப்படாததால் சம்பளம் வழங்கவில்லை.
ஆன்லைனில் ஏற்றப்பட்ட பின்பு சம்பளம் வழங்கப்படும் என்றார்.இதனால்
விரக்தியடைந்த ஆசிரியர்கள் உதவி கல்வி அலுவலர் வேண்டும் என்றே எங்களை
அலைகழிக்கிறார். எனவே தான் தனியார் மையத்தில் பதிவு செய்து வரவேண்டும்
என்று தெரிவித்துள்ளார். இதனால் தான் சம்பளம் வழங்குவதில் காலதாமதம்
ஏற்படுகிறது என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில்
சாத்தான் குளத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு உதவி தொடக்க
கல்வி அலுவலரை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்க கோரியும் வட்ட தொடக்க
கல்வி பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் தட்டி போர்டு எழுதி
வைக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்
ஆரோக்கியராஜ், அருள் ராஜ், அந்தோணியூஜின் ஆகியோர் கூறியதாவது:–எங்களுக்கு
எப்போதுமே மாத கடைசியில் சம்பளம் வழங்கப்பட்டு விடும். ஆனால் ஆன்லைனில்
ஏற்ற காலதாமதம் ஏற்படுவதால் சம்பளம் வழங்க கால தாமதம் ஆகிறது. எனவே கல்வி
அலுவலர்கள்