தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு
முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள்
தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள்
ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு
.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன்
அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு
எந்தவொரு பயனுமில்லை .
மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு
கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து
உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட
டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம்
வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு
பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண்
.60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில்
உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில்
சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு
அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன
என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி
.திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்
ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி
அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து
செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள்
தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில்.
10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட
உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட
முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil.
no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று
உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக
அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு
தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என
வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள்
பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .