Breaking News

காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாகஉபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் தற்போதுள்ள காலிப்பணியிடங்களில் பணி நிரவல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த மாவட்டத்தில் வேறு பள்ளி காலிப்பணியிடங்களிலோ , வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்,''என்றார்.