Breaking News

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


Recruitment to the post of Primary School Teacher-2015 - 17/06/2015 @ 5.00 P.M.
TO DOWNLOAD NOTIFICATION CLICK HERE...
TO DOWNLOAD PROSPECTUS CLICK HERE...
TO DOWNLOAD APPLICATION CLICK HERE...

2015 RH List (June - Dec)

June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
July 14 - Tuesday - ஷபே காதர்.
August 3 - Monday - ஆடிப்பெருக்கு.
August 28 - Friday - வரலட்சுமி விரதம்/ஓணம் பண்டிகை.
August 29 - Saturday - ரிக் உபகர்மா/யஜீர் உபகர்மா.
September 17 - Thursday - சாம உபகர்மா.
September 23 - Wednesday - அர்ஃபா.
October 15 - Thursday - ஹிஜ்ரி வருடப் பிறப்பு.
November 2 - Monday - கல்லறைத் திருநாள்.
November 10 - Tuesday - தீபாவளி நோன்பு.
November 25 - Wednesday - திருக்கார்த்திகை/குருநானக் ஜெயந்தி.
December 24 - Thursday - கிறிஸ்துமஸ் ஈவ்.
December 26 - Saturday - ஆருத்ரா தரிசனம்.
December 31 - Thursday - நியூ இயர்ஸ் ஈவ்.

ஜூலை-2015 மாத்த்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?

As far as DA from July 2015 is concerned we have CPI (IW) for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
Sep-2014 253
Oct-2014 253
Nov-2014 253
Dec- 2014 253
Jan-2015 254
Feb-2015 253
Mar-2015 254
Apr-2015 Yet to be Announced
May-2015 Yet to be Announced
Jun-2015 Yet to be Announced
Based on the current trend of inflation, the index is likely to remain in the same position for the coming months and if the current trend continues, D.A. payable for central employees and pensioners is likely to be around 118% (hike of 5%) from July 2015.
It can be anticipated that D.A. hike will be in the range of 4 to 6% considering any up or downward trend in the price index but most probably it will be a 5% hike.

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்கள் -2015 (ALL SERIES) -----Tamilnadu Lab Asst Exam 2015 - Key Answer

thanks to

ஆசிரியர்கள் செல்போனை வகுப்பறையில் கற்பித்தல் செயல்பாட்டிற்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?


முதலில் வகுப்பறை என்றால் என்ன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வகுப்பறை என்பது நான்கு சுவர்களால் சூழ்ந்த, இருக்கைகள் வரிசையாக அமைந்த, கவனிக்கும் மாணவர்களால் நிரம்பிய, கற்பிக்கும் ஆசிரியரால் அமைந்த அறை என்பது மரபான ஒன்று. தற்போது அப்படி இல்லை என்பதுதான் நிஜம். உண்மையில் தற்போதைய வகுப்பறை என்பது கற்பித்தல்-கற்றலுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதரப்பழசான கல்விக் கற்பித்தல் செயல்பாடுகள் மறந்துவிட்டு, ப்ரொக்ஜடரில், கணினியில் பாடம் கற்பிக்கும் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டம் பல்வேறு தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல்,

PAY CONTINUATION ORDER FOR THE MONTH OF MAY 2015 FOR THE VARIOUS TEACHING & NON-TEACHING POST

'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.


மறைத்ததாக புகார்:கடந்த ஆண்டு, மாநில அளவில், ஒரே நேரத்தில், ஆன்-லைன் மூலம் நடத்திய கலந்தாய்வில், பல இடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. நடப்பாண்டில், வரும், ஜூன் மாதம், கலந்தாய்வு நடக்கும் என, கூறப்படுகிறது. வழக்கம்போல், ஆன்-லைன் முறையில், கலந்தாய்வை நடத்தாமல், மாவட்ட வாரியாக, வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும் என, ஆசிரியர் கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம்., பாளையங்கோட்டை ஆர்.சி பிஷப் பங்களா முன்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரி முதுகலைப்பட்டதாரி ஆசிரியை தர்ணா

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு: தேர்வர், கண்காணிப்பாளர் மொபைல் ஃபோனுக்கு தடை!

அறை கண்காணிப்பாளர்கள், மொபைல் ஃபோன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.


தமிழக கல்வி துறை மூலம் வரும், 31ம் தேதி ஆய்வக உதவியாளர் பணிக்காக தேர்வு நடக்கிறது. ஈரோட்டில், 147 பணிக்கு, 33,231 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு வினாத்தாள், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், போலீஸ் பாதுகாப்புடன் உள்ளது.வரும், 31ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்கி, 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? விரக்தியில் ஆசிரியர்கள்

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.

அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலை, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். இதன்மூலம், பணிமூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், முதல்கட்டமாக முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்: இயக்குநர்


பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள தால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து, தினமும், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, நேரடியாகவும், போன் வாயிலாகவும், பெற்றோர் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்


சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலருக்கு அனைத்து மாவட்ட சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் பி.வடிவேல்முருகன் நேற்று அனுப்பியுள்ள கடித விவரம்:

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வியளிக்க மறுவாழ்வு குழுமம் (ஆர்சிஐ) அங்கீகரித்துள்ள கல்வித் தகுதி பெற்ற சிறப்பாசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக் கத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். சிறப்பாசிரியர்கள் பல ஆண்டுகளாக இப்பணியை மட்டுமே நம்பியுள்ளனர்.

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு


சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்ட உள்ளாட்சித்துறை பொறியியல் பிரிவில் 14 சாலை ஆய்வாளர் பதவிகள் காலியாகஉள்ளன. இந்த பணிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஐடிஐ சிவில் டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த விதவை பெண்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) மற்றும் மற்ற பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.தகுதியுள்ளவர்கள் வரும் 31-ம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சிப்பிரிவு), அறை எண் 203, மாவட்ட ஆட்சியரகம், கரூர்-639 007என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தனி விண்ணப்ப படிவம் இல்லை. வெள்ளைத்தாளில் எழுதி அனுப்ப வேண்டும். கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகலை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று(28/5/15) முதல் பதிவிறக்கம் செய்யலாம்:

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரமாக அதிகரித்தது.

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் , அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு


27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.


மாநிலத் திட்ட இயக்குநர், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோர் தெரிவித்த செய்திகள்:

1 . தற்போதைய பணிப் பளு, ஆள் பற்றாக்குறையின் காரணமாக தற்போது முதற்கட்டமாக் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள்.

நெல்லூர் மாவட்டத்தில் இரவில் பறவைகள் போல் பறந்து திரியும் அதிசய மனிதர்கள்? -மக்கள் அச்சம்



ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத் தில் பறப்பதாக தகவல் பரவி  உள்ளது.
இந்த உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெள்ளி போல வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளன.

அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை-- உயர்கல்வித் துறை செயலர் உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு முதன்முறையாக, கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு, ஜூன் முதல் வாரத்தில் இணைப்பு பாட போதனை வழங்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார். பள்ளி வாழ்க்கை முடித்து, முதன்முறையாக கல்லூரிக்குள் நுழையும் மாணவ, மாணவியருக்கு, கல்லூரி செயல்பாடு, கல்வி முறை, கல்லூரி சூழல் உட்பட, விவரங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை கல்லூரி வகுப்புக்கு தயார்படுத்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதற்காக தான், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை, பல்கலை நிர்வாக குழு தான் எடுக்கும். இந்தாண்டு, பல்கலை நிர்வாக குழுவிடம், எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல், உயர்கல்வித் துறை செயலரே, மாணவர் சேர்க்கைக்கான தேதியை முடிவு செய்து அறிவித்து உள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டது ஒரு வழக்கு தொடர்காத்தான் என தெரிகிறது.

சிலநாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக (ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாறு ஒரு உத்தரவு தொடக்க கல்வி துறையில் வெளியிடப் படவில்லை.
ஆனால் பளளிக் கல்வித்துறையால் இந்த உத்தரவு வெளியிடப்பட்ட உடன் தமிழகமெங்கும் உள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் தங்கள் மகிழ்ச்சியை முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் வெளிப்படுத்திக் கொண்டாடினர்....
ஏதோ அரசாணையே வெளியிடப்பட்டு விட்டது போலவும் நிலுவைத்தொகை நாளையே கையில் வழங்கப்படப் போவது போலவும் இருந்தது இந்தக் கூச்சல்..
இதில் கொடுமை என்னவென்றால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் "உதவிபெறும் பள்ளிக்கு மட்டும்தான் காலமுறை ஊதியமா! எங்களுக்கு இல்லையா? என ஆதங்கப்படுகிறார்..

அஞ்சல் துறையில் 932 பணிகள்

சு.பிரசாத் பெருந்துறை's photo.


இந்திய அரசின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 932 Postman, Mail Guard, Multi Tasking Staff போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை


பள்ளிகளை ஜுன் 1-ம் தேதி திறக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க JACTTA கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநில தலைவர் இளமாறன் பேட்டியளித்துள்ளார். மாணவர் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

நேற்று காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு

இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு

கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு புதிய முடிவு எடுக்க வேண்டியசூழல்எழுந்துள்ளது.
கோரிக்கை:இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 2013 - -14-ல், 49,864; 2014 - -15ல், 86,729 ஏழைகள், நலிவடைந்த பிரிவு குழந்தைகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்கு, 2013 -- 14க்கு, 25.13 கோடி; 2014 - -15க்கு, 71.91 கோடி ரூபாய் வழங்க, தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. இந்த நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.


இதற்கிடையே கத்திரி வெயிலின் உச்சகட்ட தாக்கம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மே மாதம் முடிந்து ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. வெயிலின் தாக்குதலுக்கு சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் மாற்றம்


தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் புத்தகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் வினாக்கள் பகுதியில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும், பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். பொதுத்தேர்வில், இவற்றிலிருந்தே பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படும். அதனால் இந்த ஆண்டு முதல் பாடத்தின் கடைசியாக இடம் பெறும் வினாக்கள் பகுதியில் கூடுதலாக கேள்விகள் கேட்கப்பட்டு அறிவியல் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். 

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 

இதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரம்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.இது மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படி மிக கூடுதல் என்றும், இதனுடன் நிதியுதவி பள்ளிகளுக்கான பிற செலவினங்களும் அதிகம் என்றும் அரசு கருதுகிறது.

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

புதுக்கோட்டை காமராஜபுரம் 25–ம் வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் கீழ 2–ம் வீதியில் சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25).


இவர் புதுக்கோட்டை அருகே ராசாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் மதிவாணன் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்த தாகவும், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின்   மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015)   மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.

              நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று500 ஆசிரியர்பயிற்றுநர்களைப் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

வருகிறது "மெய்நிகர்" வகுப்பறை! வரிசை கட்டும் புதிய திட்டங்கள்


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம்; "ஸ்டாக்" இல்லாமல் பள்ளிகள் காத்திருப்பு

கலக்கம்! அரசு பள்ளி தேர்ச்சி சரிந்ததால்.. விசாரணை நடத்த அதிரடி உத்தரவு


திறன் மிக்கவர்களை மேலும் திறன் மிக்கவர்களாய் மாற்றுவது தனியார் பள்ளி ! திறன் குறைந்தவர்களை திறன்மிக்கவர்களாக உருவாக்குவது அரசுப் பள்ளி!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.

அதுபோல் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன எனவும் ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழக கல்வித் துறையின் உயர்நிலை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.
ஊடகங்களும், பெற்றோர்கள் சிலரும் இத்தகைய கருத்தைத் தெரிவித்தால்கூட பரவாயில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளையும், அதில் பணிபுரிந்து வருகிற ஆசிரியர்கள் குறித்தும் உண்மையான நிலையை உணர்ந்திருக்கும் கல்வித் துறை உயர் அதிகாரிகளே இப்படிக் கூறினால், உண்மையான அக்கறையுடன் உழைத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளில், உழைப்பில் பாதிப்பு வராதா?

பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல் - தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா


நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:


இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட், எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி முடிவெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்ன? இன்றைய (25.5.15) தலைமையாசிரியர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை

ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்னென்ன? என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 
தமிழக தொடக்க கல்வி இயக்குனரகம், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்
கூறப்பட்டு இருப்பதாவது:-

மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10.60 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதி, 9.85 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 7.96 லட்சம் பேர், 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூன், 15ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், அறிவியலில், 1.15 லட்சம் பேர்; கணிதத்தில், 27 ஆயிரம் பேர், 'சென்டம்' பெற்றுள்ளதால், கணிதத்தை விட அறிவியல் பிரிவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. கணினி அறிவியல் பிரிவையும் ஏராளமான மாணவர்கள் விரும்பி விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவச மாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூபாயை தரக் கூடாது என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இரு வாரங்களுக்கு முன், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஏழைகள், நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதில், 2013 - 14ல், 49,864; 2014 - 15ல், 86,729 குழந்தைகள், தனியார் பள்ளிகளின் அறிமுக வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு செலவினமாக, 2013 - 14க்கு, 25.13 கோடி; 2014 - 15ல், 71.91 கோடி ரூபாய் வழங்க, தனியார் பள்ளிகள் கடிதம் அனுப்பியுள்ளன. எனவே, 97.04 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என, கேட்டிருந்தார்.

எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்கியருக்கும் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கடந்த, 2003 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில், 5,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன ?

தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால், வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம். வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிற பகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது. 

பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு

புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது.

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்;

பள்ளிக்கல்வி - அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குவது - தகுதியானவர்கள் விவரங்கள் கோரி இயக்குனர் செயல்முறை



தற்காலிக பணிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது


பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் ஆசிரியர் தொடர்பான பணி நியமனங்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், அலுவலர் தொடர்பான நியமனங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலமும் நடக்கின்றன.இந்த, இரண்டு அமைப்புகளிலும் வராத பல பணிகளுக்கு, துறை ரீதியாக, அரசுத் தேர்வுகள் துறை மூலமும், நேரடியாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில் இருந்து, கல்வித் துறைக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக பணி நியமனங்களும், சம்பந்தப்பட்ட பணி நியமன அமைப்பு அல்லது துறைகள் மூலம், வேலைவாய்ப்பு பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

கணினி பயின்றவர்களுக்கு SSA - வில் ரூ.16000 தொகுப்பு ஊதியத்தில் பணி-திட்ட இயக்குனர் உத்தரவு


கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் 4339 இடைநிலை ஆசிரியர்மற்றும் அலுவலர் பணிகள்

Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts; Further Details Syllabus, Age Limit, Qualification, Examination Center, Pay Scale, Selection Procedure, Examination Fee, How to Apply, Important Dates, Application Form, Kendriya Vidyalaya Sangathan (KVS) Official Notification 2015 is given below.


காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல் போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.


சிபாரிசு:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை, நேற்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார். ஆனால், காலை 8:00 மணிக்கே மாவட்டங்களில் தேர்வு முடிவுகள், 'லீக்' ஆகி விட்டது. பல இடங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர், தங்கள் மாணவர்களின் பதிவு எண்ணுக்கு, என்ன மதிப்பெண் என்பதை, பாடவாரியாக தெரிந்து கொண்டனர். காலை, 9:00 மணிக்கே, தங்களுக்கு பிளஸ் 1 வகுப்பில், என்ன பாடப்பிரிவு வேண்டும் என, தங்களுக்கு தெரிந்த கல்வி அதிகாரிகளிடம் சிபாரிசு கேட்க துவங்கி விட்டனர். 

1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'

பத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்' வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர்களை விட மாணவியர், 6.9 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 19 அரசு பள்ளி மாணவ, மாணவியர் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளனர். 
2012ல், 358; 2013ல் 453; 2014ல், 558 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. தற்போது, 1,164 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, 606 பள்ளிகள் அதிகமாகும்.தமிழில், இரண்டு மாணவர்கள், 'சென்டம்' வாங்கியுள்ளனர். ஆங்கிலத்தில், 10; கணிதத்தில், 2,539; அறிவியலில், 27,157; சமூக அறிவியலில், 10,408 பேர் என, மொத்தம் 40,116 பேர், 'சென்டம்' வாங்கியுள்ளனர்

அரசு பள்ளிகளுக்கு 15ம் இடம் 11 சதவீத மாணவர்கள் 'பெயில்'


விடுப்பில் சென்றுவிட்ட அதிகாரிகள்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டாத தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தபோதிலும், அவர்களைப் பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் யாருமே வியாழக்கிழமை ஊரில் இல்லாதது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மாநில அளவில் முதலிடத்தையும், மூன்று மாணவிகள் இரண்டாவது இடத்தையும், 13 பேர் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். மாவட்ட அளவிலும் இவர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளனர். வழக்கமாக, அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை, மாவட்ட ஆட்சியர் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்வது வழக்கம்.

முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர். அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். கங்கைகொண்டசோழபுரம் கோயில் கட்டப்பட்ட நேரத்தில் இங்கு கோயில் பணிக்காக பரண் அமைக்கப்பட்டதால் இந்த கிராமம் பரணம் என்று பெயர்பெற்றது. 


பரணம் என்று ஓர் ஊர் உள்ளதா என்றுகூட பலரும் அறியாத நிலையில், அந்த ஊரின் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், முதலிடம் பெற்ற 41 மாணவர்களில் ஒருவராக தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த பி.முத்தழகு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.

மனுவில், எனது மகள் காவ்யா, 2014 இல் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 488 மதிப்பெண் பெற்றார். அவருக்கு தமிழ் 2 ஆம் தாளில் 87 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தன. தமிழில் மட்டும் மதிப்பெண் குறைந்ததால் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தேன். மதிப்பெண் கூட்டலில் தவறு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறியும் சட்டத்தின் கீழ் விடைத்தாள் நகல் பெற்றேன். அதை பார்த்த போது, தமிழில் முழு மதிப்பெண் அளிக்கப்பட வேண்டிய  7 கேள்விகளுக்கு மதிப்பெண் குறைவாக அளிக்கப்பட்டு இருந்தது. எனவே மதிப்பெண் அளிக்கப்பட்டதில் தவறு நடந்துள்ளது. 

மதிப்பெண்களை அள்ளும் மாணவர்கள் - கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை: கல்வியாளர்கள் கவலை

'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது. கற்பித்தல் முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் கட்டாயம் மாற்றம் அவசியம்' என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி:

பத்தாம் வகுப்பு தேர்வில், நல்ல 'ரிசல்ட்' கிடைத்துள்ளது. அறிவியல் பாடத்தில், 10 மாணவர்களில், ஒருவர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், 400 மதிப்பெண் என்பது, சரித்திரமாக இருந்தது; இப்போது, 499, 500 மதிப்பெண் எல்லாம் எடுக்கின்றனர். மாநிலத்தில், முதல் மூன்று இடங்களை பிடித்தோர் எண்ணிக்கை, 700க்கு மேல் போகிறது; அடுத்தடுத்த ஆண்டுகளில், 2,000 ஆக உயரும்.இது, சரியான அறிகுறி அல்ல. அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில், நாம், 29வது இடத்தில் இருக்கிறோம்; இன்னும் பின்னடைவு ஏற்படும். புள்ளிவிவரங்கள் பார்க்கவும், கேட்கவும் நன்றாக உள்ளது. 

"கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஆசிரியர்களால் சாதிக்க முடியும்" - 2015/16 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் மேற்க்கொள்ள வேண்டியவைகளை பட்டியலிட்டு அணைத்து ஆசிரியர்களுக்கும் இயக்குனர் கடிதம்


மாணவர் விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு!!


To access data entry for student profile on EMIS through by Google chrome browser

please do the following
Copy the  url  and execute for Google chrome
https://emis.tnschools.gov.in/accounts/login/?next=/


You will get , the student data entry screen

தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் - இயக்குனர் உத்தரவு


பள்ளிக்கு வராததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த H.M சஸ்பெண்ட்

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியையை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் துத்திகாடு ஊராட்சியை சேர்ந்த தெள்ளை மலை கிராமத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் கடந்த மாதம் 28ம் தேதி அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை வேண்டாபாய், கடந்த டிசம்பர் மாதம் முதலே பணிக்கு வருவது இல்லை என்று தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் எம்எல்ஏ மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை கண்டித்தனர். இதற்கு அந்த தலைமை ஆசிரியை, ்நான் வெகு தொலைவில் இருந்து வருகிறேன். ஏதாவது கேட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
சமச்சீர்க் கல்வி அமலுக்கு வந்த பின், 10ம் வகுப்புக்கான நான்காவது பொதுத் தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 10.70 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் இன்று காலை, 10:00 மணிக்கு வெளியிடுகிறார். கடந்த ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வில், 90.70 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறையுமா அல்லது அதிகரிக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநில 'ரேங்க்' எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அறிவியலில், 69,560; சமூக அறிவியலில், 26,554 பேர், 'சென்டம்' வாங்கினர். இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்ததால், 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்கும் என, தெரிகிறது. பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட, 'ரேங்க்' பெறாத அரசுப் பள்ளிகள், 10ம் வகுப்பிலாவது அதிக இடங்களை பெற்று, கல்வித்துறை ஆறுதல் அளிக்குமா என, அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை முடிந்துபள்ளி திறந்தவுடன் அவர்கள் புதிய பள்ளியில் சேர்ந்துவிடுவது வழக்கம். இதற்கு வசதியாக, விருப்பமும், தகுதியும் உடைய ஆசிரியர்களிடம் இருந்து ஏப்ரல் கடைசி வாரத்திலேயே தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுவிடுவார்கள்.இடமாறுதலைப் பொருத்தவரையில்,

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27 வரை பதிவு: உடனடி துணைத்தேர்வு ஜூன் 26ல் துவக்கம்

சென்னை: 'பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வில், விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம்.
இரு தாள் கொண்ட மொழிப்பாடங்களுக்கு, பாடத்துக்கு தலா, 305; கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, பாடத்துக்கு தலா, 205 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு உடனடித் துணைத் தேர்வுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 


பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரையின்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மாணவர்கள் நலன் கருதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். 

பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு


'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


கோடை விடுமுறை முடிந்து, வரும், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாதம் வரை பள்ளி விடுமுறை நாளாக உள்ளதால், பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்கள் தேங்கி இருக்கும். அதை சுத்தம் செய்து, 
கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த கிணறுகள், பள்ளங்கள் இருந்தால் அதை சீரமைக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை, பள்ளி திறந்தவுடன் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள் ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வி - அரசு உதவிப்பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் நிர்ணயம் செய்து உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய உத்தரவு

10-ஆம் வகுப்புத் தேர்வு; தற்காலிகச் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.


தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியரிடம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


மாணவர்கள் ஜூன் 4-ஆம் தேதி முதல் இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு


TO DOWNLOAD SSLC SUPPLEMENTARY EXAM CLICK HERE...

பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தேர்வுக்கு மே 22 முதல் 27-ஆம் தேதி வரை பள்ளிகள் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125.பதிவுக் கட்டணம் ரூ.50.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.



மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

பள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து

அனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில், டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் கடந்தும் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி

சித்தேரிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


ரிஷிவந்தியம் அடுத்த சித்தேரிப்பட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பாலப்பட்டு, சித்தேரிப்பட்டு, பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு, வேளானந்தல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள், இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2008ம் ஆண்டு வரை உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய சிடி போன்ற மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது, கல்வி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரத்தில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஆய்வு, விலையில்லா பொருட்கள் வினியோகம், நிலுவை வழக்குகள்குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா தலைமையில் நடந்தது. இதில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மூடல்

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களுடன், ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும், 1,800, 'டுபாக்கூர்' நர்சிங் பயிற்சி பள்ளிகளை, தமிழக அரசு இழுத்து மூடுகிறது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் பிச்சை கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 2015 - 16ல், சேர்க்கை இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை மற்றும் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

ஜூன் 21ல் பள்ளி, கல்லூரிகளில்யோகா பயிற்சி நடத்த உத்தரவு

அனைத்து கல்லுாரிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஜூன் 21ல், யோகா பயிற்சி காட்சி நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பிரதமர் மோடி ஐ.நா., சபை சென்றபோது, 'ஜூன் 21ம் தேதியை, யோகா தினமாக அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். இதையொட்டி, ஜூன் 21ம் தேதி யோகாதினமாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக பரிந்துரையின் பேரில்,'அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலையில், யோகா பயிற்சி காட்சி நடத்த வேண்டும். மாணவர்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு போட்டிகள் வைத்து, பரிசுவழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.


அதன்படி, இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்ட் 23, 2010-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களையே 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நியமிக்க வேண்டும். எனினும், இந்தச் சட்டப்பிரிவுகளை அமல்படுத்த 5 ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. 

மத்திய பாடத்திட்டத்தின் படி தமிழக பாடத்திட்டத்தை உயர்த்த நடவடிக்கை



மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.


முதற்கட்ட பணி...: தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இப்பாடத்திட்டப்படி, முப்பருவ முறை கற்பித்தல் மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது. இதேபோன்று, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஈடாக மாற்றியமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணி துவங்கி உள்ளது.

ரேசன் கார்டுதாரர்களிடம் மொபைல் எண் சேகரிக்க உத்தரவு



ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தில், கார்டுதாரர் மொபைல் எண் மற்றும் தற்போதைய வயது விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான ரேஷன் கார்டுக்கு மாற்றாக, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
உடற்கூறு பதிவுகளை உள்ளடக்கிய ஆதார் பதிவு பணி நிறைவு பெற்றதும், அதன் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்மார்ட்' கார்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆதார் பணி நிறைவு பெறாததால், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் இணைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி துறை பணிகளை முடக்கியுள்ள 500 வழக்குகளை ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை


பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் கீழ், தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிக், மாநில சர்வ சிக்ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான், தேர்வுத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இயக்குனரங்கள் உள்ளன.

10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை


10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை

26-6-15-மொழிப்பாடம்1

27-6-15-மொழிப்பாடம்2


29-6-15-ஆங்கிலம் 1


30-6-15-ஆங்கிலம்2

1-7-15-கணக்கு

2-7-15-அறிவியல்

3-7-15-சமூக அறிவியல்

தேர்வு காலை 9மணி முதல் 12

விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்