Breaking News

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்

 | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு, கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலு வடைந்து வருகிறது. மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர் பார்த்து இளைஞர்கள், மாணவர் கள் என லட்சக்கணக்கானவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடை யடைப்பு, லாரிகள் இயக்கம் நிறுத்தம் என தானாக முன்வந்து பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழக அரசு ஊழியர்களும் பல் வேறு போராட்டங்களை அறி வித்து வருகின்றனர். தமிழக தலைமைச் செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் கூறுகையில்,'' நாங்கள் 20-ம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகிறோம். பணிக்கு வந்த பின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்'' என்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப் பில்,''நியாயமான மக்கள் போராட் டத்தில் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் சங்கமும் பங்கேற்கும் வகையில் 20-ம் தேதி மாலை அனைத்து மாவட்ட தலைநகர் களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப் படை பணியாளர்கள் மாநில மையச் சங்க தலைவர் கே,கணசன்,'' சங்க உறுப்பினர்கள் அனைவரும் 20-ம் தேதி (இன்று) ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார். இதே முடிவை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜனும் அறிவித்துள்ளார். ''மாணவர்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு அலுவலர் சங்கம் ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மேலும், போராட்டத்தில் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் வகை யில், ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட முடிவெடுக்கப் பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இதேபோல பல்வேறு சங்கங் களும் அவசர கூட்டம் கூட்டி, போராட்டத்தை அறிவித்து வருகின்றன. கடையடைப்பு, லாரிகள் இயக்கம் நிறுத்தம் என தானாக முன்வந்து பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.