Breaking News

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்


உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



இதில், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பல அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.