Breaking News

வாக்காளர் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, மீண்டும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. நாளை மற்றும் பிப்., 6ல், மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும். இதில், வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.


தகுதியுள்ள வாக்காளர் அனைவரும், உரிய ஆவணங்களுடன், ஓட்டுச்சாவடிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். 'வாக்காளர் பட்டியலை பிழையின்றி தயாரிக்க, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, பொதுமக்கள் முன்னுரிமை தர வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.