Breaking News

வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்


வங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை (Probationary Officer) நேரடியாக நிரப்ப உள்ளது.
கடந்த முறையை விட தற்போது அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முதல் நிலைத்தேர்வு ஜுன் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வுக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்தான். ஆனால், அவர்கள் 1.9.2015-க்கு முன்பாக பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும்.

ஊழலை ஒழிக்க தண்டனை அதிகரிப்பு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில் சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்


அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி மண்ணோடு வீழ்த்தி, ஒழிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஊழலுக்கு எதிரான சூளுரை
சமீபத்தில் 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் கனடா சென்றபோது, டொரண்டோ நகரில், கடந்த 16–ந் தேதி கனடா வாழ் இந்தியர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், ‘‘இதற்கு முன்பு இந்தியா ‘ஊழல் இந்தியா’ என்று அறியப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அதை ‘திறன் வாய்ந்த இந்தியா’வாக மாற்றிக்காட்ட விரும்புகிறோம். அதை செய்து காட்டுவோம்’’ என சூளுரைத்தார்.

GROUP-2 OT NOTIFICATION. (Prelims, Mains & Interview)

GROUP-2 OT NOTIFICATION.
(Prelims, Mains & Interview)
Vacancy=1241.
Prelims-26-07-2015.
Last Date to Apply - 29-05-2015.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்


முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 


*திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 

துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச் சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தனியார் பள்ளியில் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது வீதிக்கு வீதி தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர என்னென்ன ஆவணம் தேவை


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், மே, 6ம் தேதி முதல், 29ம் தேதி வரை அண்ணா பல்கலை மையத்திலும், மே, 27ம் தேதி வரை, மற்ற, 59 மையங்களிலும் வழங்கப்படுகிறது.

மாவட்ட நூலகங்களில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்


வருகிற மே 7ம் தேதி வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் மற்றும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
மாணவ மாணவிகள் தேர்வு முடிவுளை இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் மாவட்ட நூலகங்கள் மற்றும் கன்னிமாரா நூலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவ்சமாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக இயக்குனரகத்திலிருந்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ, பி கிரேடு கல்லூரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது


கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது. 

          நாடு முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 54 லட்சம் பேர் கல்விக் கடன் பெற்றுள்ளனர். இதில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் தமிழக மாணவர்கள். இந்நிலையில், கல்விக் கடனை வசூலிப்பதில் வங்கிகள் விதிமுறைகளை மீறி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காக, கல்விக் கடன் வழங்குவது, வசூலிப்பது குறித்த விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யுமாறு இந்திய வங்கிகள் சங்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

school edcation teachers 1.1.2015 Promotion Panel

CRC - CCL தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றிய உ.தொ.க.அலுவலர் அறிவிப்பு


ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்


சென்னை, ஏப்.29-ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் ஆசிரியைகள் தங்களின் சேலைக்கு மேல் ‘கோட்’ அணியவேண்டும் என்றும், இந்த உத்தரவு ஆசிரியர்களின் கருத்துகளின் பேரில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும், இதற்கான முறையான சுற்றறிக்கை பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது.

1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச வயது 18–ல் இருந்து அதிகபட்சமாக ஒவ்வொரு இனத்தவரை பொறுத்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த 24–ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோக்கப்படுகிறது. மே 6–ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் சேவை மையங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க 'தள்ளுமுள்ளு':தேர்வு துறை சேவை மையங்களில் குளறுபடி




தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, அரசுத் தேர்வுத் துறை சார்பில், மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது.இதற்கு கடந்த, 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.

மே 5ம் தேதி கடைசி நாள்.பிரச்னைகள் என்ன? மாவட்ட முதன்மை கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில், நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மையங்களில் போதுமான ஆட்கள் இல்லை. கல்வி அலுவலக ஊழியர்கள் தேர்வு பணியில் உள்ளனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், விடுப்பில் சென்று விட்டனர். பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு விடை திருத்தும் பணியில் உள்ளனர். துவக்கப் பள்ளிகள் வரும், 30ம் தேதி வரை நடக்கின்றன.

ஆசிரியர் பற்றாக்குறையால் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம்


மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


தேர்வுத் துறையின் சரியான திட்டமிடல் இல்லாததால் மார்ச் 19ல் துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இழு... இழு... என இழுத்து ஏப்.10ல் தான் முடிந்தது. இதன் பின் ஏப்.20 முதல் வேலம்மாள், மகாத்மா, செயின்ட் மேரீஸ் மற்றும் பி.கே.என்., மெட்ரிக் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.

6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு

சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்படும்.



ஜூன் முதல் வாரத்தில், சிறப்பு முகாம் நடத்தி, பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை


பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு, பள்ளிகளில் பலவிதமான ஒழுக்கக்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்-அப் வழியாக கணித வினாத்தாள் அனுப்பிய விவகாரம், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பள்ளி மாணவருடன் பெண் ஆசிரியை ஓட்டம், மாணவியரிடம் தகாத முறையில் ஆசிரியர் நடந்து கொள்வது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், கல்வித்துறைக்கு களங்கம் ஏற்படுவதுடன், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரும், நெருக்கடியான மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, சில புதிய விதிமுறைகளை பின்பற்ற, கல்வித்துறை தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வி நிபுணர்களிடம் ஆலோசனை நடந்து வருகிறது.

வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்த முற்றிலும் தடை விதிப்பது; பள்ளிக்கு மொபைல்போன் எடுத்துச் சென்றாலும், தலைமை ஆசிரியர் அறையிலோ அல்லது, அலுவலகத்திலோ வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வர தடை விதிப்பது; வக்கீல்கள் அணிவதுபோல், பெண் ஆசிரியைகள் கோட் அணிவது, இளவயது ஆண் ஆசிரியர்கள், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் இறுக்கமான சட்டை அணிவதை தவிர்ப்பது உள்ளிட்ட சில முக்கிய விதிமுறைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில இடங்களில் ஆசிரியர் - மாணவர் இடையே ஏற்படும் தவறான நட்பால், கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சில ஆலோசனை முன்வைக்கப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. கல்வித்துறை அங்கீகாரத்துக்கு பிறகு, இவ்விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்" என்றார்.

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள்; ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் வலியுறுத்தினார். மதுரையில் மாநில பொதுக்குழு இதில் மணிவாசகம் பேசியதாவது:

கல்வித் துறையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பிலும் இம்முறை பின்பற்றப்பட உள்ளது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2வில் அனைத்து பாடங்களையும் படித்து மாணவர்கள்
தேர்வு எழுதுவதாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பிளஸ் 1, பிளஸ் 2விலும் இரு பருவமுறை தேர்வு முறை அமல்படுத்த வேண்டும்.கடந்தாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்கில் பல்வேறு இடங்கள் மறைக்கப்பட்டன. நடப்பாண்டில் கோடை விடுமுறைக்குள் கவுன்சிலிங் நடத்தி முடிக்க வேண்டும். பணியிடங்கள் வெளிப்படையாக அறிவித்து, அரசியல் தலையீடுக்கு அடிபணியாமல் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கல்வி காவியமாகவில்லை:ஸ்மிருதி இரானி பார்லி.,யில் தகவல்




கல்வித்துறை நியமனங்கள் காவியமாக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். லோக்சபாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது அதற்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்குழுவில் இந்துத்துவக் கொள்கைகளை கொண்டவர்களை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரசை சேர்ந்த சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரசை சேர்ந்த சுகதா போஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் ஸ்மிருதி இரானி பேசுகையில், அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே கல்வி முறைகளை பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அதையே தான் நான் மீண்டும் இங்கே கூற விரும்புகிறேன். கல்வித்துறை காவிமயமாக்கப்படவில்லை. ஐ.மு. கூட்டணி அரசு, கல்வித்துறைக்கு செலவிட்ட தொகையை விட இன்னும் அதிகமாகவே பா.ஜ.க., அரசு செலவிட்டு வருவதாக ஸ்மிருதி இரானி பேசினார்

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை

ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.


கட்டுப்பாடு:
தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவை, ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த காலியிடங்களில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வு முடிவை வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. ஏப்., 16ல் இடைக்காலத் தடை நீக்கப்பட்டு, 70 சதவீத ஆசிரியர்களை, அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCHOOL LAB ASSISTANT ONLINE APPLICATION CENTRE IN CUDDALORE DISTRICT



Male

 RCT Hr Sec School Chidamabaram

Govt Boys Hr Sec School Virudhachalam

Govt Boys Hr Sec School Tittagudi

Govt Boys Hr Sec School Kattumannarkoil

St Joseph's Hr Sec School Manjakuppam

Female

Municipal Hr Sec School Cuddalore

Govt Girls Hr Sec School Chidambaram

Fathima Matric Hr Sec School Virudhachalam

Govt Girls Hr Sec School Tittagudi

PRG Hr Sec School kattumannarkoil

For both

Govt  Hr Sec School Panruti

Tamil Nadu, Medical Services Recruitment Board (MRB) Recruitment 2015 – Apply Online for 7243 Nurse Posts


                               CLICK HERE FOR ADVERTISEMENT....
                                  APPLY ONLINE....... 

நேரடி நியமனம் மூலம் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை (6 DISTRICT UPDATED)


பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட "ஜாக்டா" முடிவு


பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

 

 வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.

           இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில், மாத சம்பளம் 6,500 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு,

01/01/2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதிவி உயர்வு - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வு பட்டியல் தயாரிப்பு கலந்தாய்வுக்கு கல்வித்துறை ஆயத்தம்


மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம்,
தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 
முதற்கட்டமாக, 770 மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை பரிசோதித்து வருகின்றன.அதனால், அங்கன்வாடி குழந்தைகள் முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை, அனைவரும் பயன்பெறும் வகையில், மத்திய அரசு, 'ராஷ்டிரிய பால் சுவதஸ்சிய காரிய கிராம' என்ற, புதிய மருத்துவ பரிசோதனை திட்டத்தை அறிவித்துள்ளது.பயனுள்ள இந்தமத்திய அரசின் திட்டம், தமிழகத்திலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

Tamil Nadu Lab Assistant Job Vacancy in All District :


Thiruvallur – 179
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208
Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore – 166
villupuram – 317
Theni – 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52

50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்


50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
        நீண்ட நாட்களாக  நிலுவையில்  இருந்துவந்த   மத்திய அரசு ஊழியர்களுக்கான 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  நேற்று தெரிவித்துள்ளார்.
             இந்த  இணைப்பு 1/1/15  முதல் அமுல்படுத்தப்பட்டு1/1/15  முதல் 63'/, அகவிலைப்படி வழங்கப்பட  உள்ளதாகவும்  இதனை செயல்படுத்த  அரசுக்கு 1230 கோடி கூடுதல் செலவு ஏற்படுமென மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது .

ஜீன்ஸ், மொபைல் போனுக்கு தடை.ஆசிரிய ஆசிரியைகளுக்கு புது கட்டுப்பாடு.வரும் கல்வியாண்டு முதல் அமல்

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில், பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பயங்கர நிலநடுக்கம்... நிலைகுலைந்தது நேபாளம்... பலி எண்ணிக்கை 758 ; உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டும்...

பயங்கர நிலநடுக்கம்... நிலைகுலைந்தது நேபாளம்... பலி எண்ணிக்கை 758 ; உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டும்... காத்மண்டு: நேபாள நாட்டில் இன்று மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் 758 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள்,

BT to PG Promotion Panel As on 01.01.2015


 பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) - (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்)

CLICK HERE TAMIL COVERING LETTER....
                         CHE,BOT,ZOO COVERING LETTER....
                          CHE,BOT,ZOO PANEL....
                           ENG SM & CM PANEL....              

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி -உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்குமுதுகலை பட்டத்தை தமிழ்வழியில்படித்திருந்தால் மட்டுமேஅரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்'என மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டது.

மதுரை புதூர் ஸ்டீபன் ராஜாஇவர் பி..,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ்
வழியிலும்எம்..,(பொருளாதாரம்)ஆங்கிலத்திலும் படித்துள்ளார்ஆசிரியர் தேர்வுவாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநடந்ததுதமிழ் வழியில் படித்தவர்களுக்கானஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன்ராஜா விண்ணப்பித்தார்டி.ஆர்.பி., தலைவர்அதை நிராகரித்தார்

B.T TAMIL TEACHERS APPOINTED ON 2011-12 AND 2012 REGULARAISATION ORDER ›



RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ›


தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கும் 5 அரசு பள்ளிகள் உட்பட 15 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள 

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை இயங்கி வருகிறது. 
இதில் ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களைஉறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.பள்ளியில் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நட்டுவைத்து வளர்த்தல், தூய்மையை பேணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேசிய பசுமைப்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுபோன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் பள்ளிகளைத் தேர்வுசெய்து சுற்றுச்சூழல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரித்த நடுவப்பட்டி, கிளவிகுளம் சூலக்கரை, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பாம்பாட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும்,30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.




ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியில் இருந்து, 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதி என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கருவூலகங்களுக்கு, துறை உயர் அதிகாரி அனுப்ப வேண்டும். ஏற்கனவே வழங்கிய உத்தரவு, மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஆறு மாதங்கள், தொடர்ந்து சம்பளம் பெற வேண்டும் எனில், உரிய உத்தரவை, இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனரகம் அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை, சம்பளம் வழங்குவதற்கான உத்தரவு அனுப்பப்படாததால், சம்பள பில்களை, கருவூலகங்களில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மே 11 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள்: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு

2015- 2016ஆம் கல்வி ஆண்டின் எம்பிபிஎஸ் மற்றும் BDS படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் மே 11 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி
அளித்த மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கை செயலாளர் சுகுமார், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்த விபரங்கள் வரும் மே 10 ஆம் தேதி செய்தித்தாள்களில் வெளியாகும் என தெரிவித்தார்.
மே 11ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என தெரிவித்த அவர், 19 மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.WWW.TNHEALTH.ORG என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப மே 29ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் ஜூன் 12ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது எனவும் சுகுமார் தெரிவித்தார்.

கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களை வற்புறுத்தக் கூடாது

தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என சுயநிதி பொறியியல்கல்லூரிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அந்த மாணவர்களுக்குத் தேர்வு அனுமதிச் சீட்டை வழங்கி, தேர்வை அவர்கள்சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீண்குமார் அனுப்பியுள்ள கடித விவரம்:அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய தலித் மாணவர்களுக்கு பராமரிப்புப் படி, கல்விக் கட்டணங்களை அரசே வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 2014-15 ஆம் ஆண்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, இணையதளம் மூலம் மின்னணு தீர்வை (இசிஎஸ்)முறையில் வழங்கப்பட்டுவிட்டது.தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என்பதோடு, அவர்களுக்குதேர்வு அனுமதிச் சீட்டை வழங்கி தேர்வெழுத அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்கு(24.4.51)இன்று முதல் விண்ணப்பிக்கலாம்-நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு...


அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஓய்வூதியர்கள் மார்ச் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய ஒரு 
நிதியாண்டில் பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது கணக்கிடப்படும் வருமான வரியினை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலரால் அவர்தம் மாதந்திர ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஓய்வூதியர்கள் வருமான வரி சட்டம் 1961-ன் அத்தியாயம் VI-A ன் கீழ் தகுதியுள்ள கழித்தல்களுக்கான (eligible deductions)விவரங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் / கருவூல அலுவலருக்கு தெரிவிக்கும்பட்சத்தில், அவர்தம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.


காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கிரேடுபே: 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
*சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
*ஓ.சி 30
தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு)
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும்
பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7ம்தேதியும் 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம்தேதியும் வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை இயக்ககம் அறிவித்துள்ளது


குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்


சென்னை : மே 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுகள் ஜூன் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
79 காலி இடங்களுக்கான தேர்வு மே மாதத்திற்கு பதிலாக ஜூன் மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

CCE தேர்ச்சி விழுக்காடு,மக்கள் தொகைக்கணக்கு,மற்றும் AEEO அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டிய முக்கிய படிவங்கள்

CCE RESULT FORM.1  FOR BELOW 20 STUDENTS PRIMARY/MIDDLE

CCE RESULT FORM 2  FOR ABOVE 20 STUDENTS PRIMARY/MIDDLE

CCE RESULT FORM.3  ONLY PRIMARY

CCE RESULT FORM 4  ONLY  MIDDLE

CCE RESULT FORM 5  PRIMARY/MIDDLE

CCE RESULT FORM 6  PRIMARY/MIDDLE



நன்றி :-
திரு    சேகர் 
மாதனூர் ஒன்றியம், வேலூர் மாவட்டம்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

Tamil Nadu District Wise

Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்காக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒரே எழுத்துத்தேர்வை நடத்த உள்ளது. அந்த தேர்வின் வினாக்கள் 10-வது வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும்.

அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு!


சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.

பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!

போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.


இந்த, 'சாப்ட்வேர்,' பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களான, மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத் துறை ஆய்வாளர் ஆகியோரின் கம்ப்யூட்டர் மற்றும் 'லேப் - டாப்'களில் ஏற்றப்பட்டு உள்ளன. அனைவருக்கும், தனித்தனியாக, ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்கப்பட்டுள்ளன. போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை தடுக்க, பிறப்பு, இறப்புடன், 'ஆதார்' எண்ணையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிறப்பை பதியும்போது, பெற்றோரின், 'ஆதார்' எண்ணும், இறப்பை பதியும்போது, இறந்தோரின், 'ஆதார்' எண்ணும் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியை, பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களுக்கு, சுகாதாரத் துறை அளிக்கிறது.

கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிப்பறையைச் சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்தியதாக பள்ளி நிர்வாகி, ஆசிரியர்- ஆசிரியைகள் என 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.


களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பண்டிதன்குறிச்சியில் அரசு உதவிபெறும் தனியார் உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த 16-ஆம் தேதி பள்ளிக் கழிப்பறையில் உள்ள அடைப்புகளைச் சுத்தப்படுத்த சில மாணவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியைகள் சிலர் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, கீழப்பத்தை, கீழவடகரை கிராம மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள்,

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–கடந்த 15–ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டோம். வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றுவிட்டு அமைச்சரை சந்தித்தோம்.

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!


கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எதை எடுத்தாலும், 'ஆசிரியை மாணவனோடு ஓட்டம்' என்ற செய்திதான் முன் வந்து நிற்கிறது. இந்த செய்தியை படித்தவர்கள், ஷேர் செய்கிறார்கள். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட அதிகம் விவாதித்தது, ஆசிரியை மாணவனோடு ஓட்டம் என்ற செய்தியைத்தான். இந்நிலையில், வெறும் மீடியா பசிக்காக சமூகத்தை சீரழிக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள் கல்வியாளர்கள்.

''எல்லா காலக்கட்டத்திலும் இதுபோல நடந்திருக்கிறது. ஒரு மனிதன் தனிமையை உணரும் போது எதாவது ஒரு தேவை அவனுக்கு இருக்கலாம். அந்த தேவையை ஒட்டித்தான் எந்த முடிவுக்கும் அவன் போறான். அதேபோல், அந்த ஆசிரியைக்கு எந்த மாதிரியான சூழல் இருந்தது என்பது முக்கியம்.

செயல்படுத்தபடாமல் முடங்கிய பிரத்யேக இணையதள வடிவமைப்பு திட்டம்


அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத பள்ளிகள் குறித்து அடையாளம் காண்பிக்கும் நோக்கில், 2011ல் பிரத்யேகமாக துவக்கப்பட்ட இணையதளம் வடிவமைப்பு திட்டம், செயல்படுத்தபடாமல் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குறைந்தது நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 15 (ஐ.எம்.எஸ்.,) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர். பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.