Breaking News
அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து ஓய்வு
அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார்.
பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் இயக்குநராக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 2
ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இருந்துவந்த
பல்வேறு சிக்கலான நடைமுறைகளை அகற்றி, தேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தினார்.பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
Labels:
பள்ளிக் கல்வி
பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்
கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில்
பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில்
நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான
காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய
நடைமுறை அமலாகிறது.
இதற்காக பி.எட்., கல்லுாரிகளில்
அமல்படுத்தவேண்டிய புதிய நடைமுறைகளை விளக்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவந்தர் ஜி.விஸ்வநாதன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுவருகிறார்.
Labels:
B.ED
பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்!!
ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில், 'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் இதுவரை பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டத்திலும், முழுமைப்படுத்தப்படவில்லை. இதனால், கிராமப்புறம், மலைப்பகுதிகள்,
Labels:
கட்டுரை
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் டிரைவர்கள்!
சென்னையில் முதல் முறையான ஓடும் இந்த மெட்ரோ ரயிலை இயக்கும் பணியில் இரண்டு பெண் பைலட்டுகளும் இடம் பெற்றுள்ளனர். பிரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ என்ற அந்த இரு பெண் பைலட்டுகளுக்கும் தற்போது 20 வயதுதான் ஆகிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் படிப்பில் பட்டம் பெற்றுள்ள இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
Labels:
பத்திரிக்கை செய்தி
சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னை:தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா
(பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி
(பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி
(பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள்
உள்ளன.நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு
மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.
* சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுாரிகள்
* சென்னை அரும்பாக்கம் யுனானி மருத்துவக் கல்லுாரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரிகள்.
* மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி
* நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றில் விணணப்பம் கிடைக்கும்.
Labels:
UNIVERSITY
ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு
சென்னை:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்துஉள்ளன.
இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத
அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை
வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி
வருகிறது.இந்நிலையில், ஜாக்டோ உயர்மட்டக்குழு ஆலோசனைக்
கூட்டம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ்
தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.ஆலோசனை முடிவில், மீண்டும் அரசுக்கு
கோரிக்கை மனு அனுப்புவது என்றும், அரசு அழைத்துப்பேசாவிட்டால், ஆக., 1ம்
தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Labels:
ASSOCIATION NEWS
சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை பெற சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் போதுமானது: மத்திய அரசு அறிவிப்பு
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள்
மற்றும் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினராக மத்திய அரசு அறிவித்து
உள்ளது. இத்தகைய சிறுபான்மையினருக்காக மத்திய-மாநில அரசுகள் அவ்வப்போது
பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.
Labels:
பத்திரிக்கை செய்தி
குறு வளமைய பயிற்சி
11.07.2015 அன்று தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற்சி
Topic : ENRICHMENT TRAINING ON CCE IN SABL
25.07.2015 for upper primary
Topic : ENRICHMENT TRAINING ON CCE IN SABL
25.07.2015 for upper primary
Labels:
BRC/CRC
தொடக்கப் பள்ளிகளில் A B L எனப்படும் செயல் வழிக் கற்றல் முறை பயனளிக்கிறதா?
இன்று திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. ஒரு ஆரோக்கியமான விவாதம் தேவை. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கல்வியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அதன் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் குறித்து, அறிவுபூர்வமாக, அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க அரசை வற்புறுத்த வேண்டும்.
Labels:
கட்டுரை
பள்ளி மாணவர்களின் EMIS எண்ணுடன் ஆதார் எண்ணை ஒருங்கிணைத்தல் எப்படி? பவர் பாயிண்ட் விளக்கம்
WELCOME என்ற பகுதியில் CLICK செய்யவும்
Labels:
EMIS
வரலாற்று சுவடுகள்- காமராஜரின் தன்மானம்
காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் தங்கி இருந்தபோது, அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்தார். காமராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்க விரும்பினார்.
ஆனால் காமராஜர் சந்திக்க மறுத்து விட்டார். உடனே உதவியாளர் அதிர்ச்சி அடைந்து, ''உலகமே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே உங்களை பார்க்க விரும்பும் போது...'' என்று இழுத்தார்.
போராட்டம் தான் வாழ்க்கை- சிந்தனைக் கதை
ஏராளமான பணம் இருந்தும் கூட இளைஞன் ஒருவன், ஏதாவது பிரச்னையில் சிக்கித் தவித்தான். மனதில் நிம்மதி இல்லை. முதியவர் ஒருவர் அவன் வீட்டுக்கு வந்தார். வாட்டமுடன் இருந்த இளைஞனிடம், ""உனக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார்.
""நான் நிறைய சம்பாதிக்கிறேன். குடும்பத்திலுள்ள அனைவரும் இஷ்டம் போல செலவழித்தும் யாருக்கும் திருப்தி இல்லை. எப்போதும் வேலை செய்தே அலுத்து விட்டேன். நிம்மதியின்றித் தவிக்கிறேன்,'' என்றான் சோகத்துடன்.
பெரியவர் சிரித்தபடி, ""நிம்மதி தரும் இடம் ஒன்று இருக்கிறது. என்னுடன் வருகிறாயா... பார்க்கலாம்,'' என்றார்.
ஆர்வமாக அவருடன் புறப்பட்டான் இளைஞன். அவர் அவனை மயானத்துக்கு அழைத்துச் சென்றார்.
அவன் அதிர்ந்து போனான். ""என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்?'' என்றான்.
""பார்த்தாயா... தன் மீது நெருப்பு எரிவது கூட தெரியாமல், நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்... இறப்புக்கு பிறகே மனிதனுக்கு நிம்மதி... அதுவரை மனிதனுக்கு பிரச்னை இருக்கவே செய்யும். வாழும் வரை போராடக் கற்றுக் கொள்.
போராட்டம் தான் வாழ்க்கை!
Labels:
கதைப் பகுதி
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக் கலந்தாய்வு
அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி
நிறுவனத்திலும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி
பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள வழியாக ஒற்றைச்
சாளர முறையில் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 4 வரை நடைபெறவுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக்
கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கலந்தாய்வுக்கு வரும்போது தேவையான அனைத்து
சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். கீழ் குறிப்பிட்டுள்ளபடி கலந்தாய்வு
நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 1: சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்
திறனாளிகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள்,
முன்னாள்ராணுவத்தினரின் மகன்,மகள்) ஆங்கில மொழி, தெலுங்கு மொழி, உருது
மொழி, தொழிற் பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு
நடைபெறும்.
ஜூலை 2: தொழில், கலை பிரிவுகள்.
ஜூலை 3, 4: அறிவியல் பிரிவு.
பி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு: கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர்,
ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின்
முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இதில் தமிழக கல்வியியல் கல்லூரி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய கல்வியியல் கல்லூரி கவுன்சில் பி.எட்,
எம்.எட்., படிப்புகளை 2 ஆண்டுகளாக தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் பி.எட், எம்.எட்.படிப்புகள் 2 ஆண்டுகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்லூரியில் என்னென்ன வசதிகளை மாணவர்களுக்கு
செய்ய வேண்டும் என்றும் பாட திட்டங்களை எப்படி வகுத்து நடத்திட வேண்டும்
என்று பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு கல்லூரியில் குறைந்த பட்சம் 16
பேராசிரியர்கள் இருக்க வேண்டும். கல்லூரி 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்
இருக்க வேண்டும். விடுதி வசதி முன்பு இருந்தது போல் 2 மடங்காக இருக்க
வேண்டும்.
Labels:
B.ED
ஹெல்மெட்டின் பணி என்ன?-ஹெல்மெட் எப்படி இருக்க வேண்டும்
தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்...‘மறுபடியும் மொதல்ல இருந்தா’ என பலரும் இந்த அறிவிப்பைக் கலாய்க்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு. ‘அரசு தரச் சான்றிதழான ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்தான் அணிந்திருக்க வேண்டும்.
பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம். இல்லையேல் லைசென்ஸ் முடக்கப்படும்’ என்பது அதில் முக்கியமான வித்தியாசம்! அது என்ன ஐ.எஸ்.ஐ? அதற்கும் சாதாரண ஹெல்மெட்டுக்கும் என்ன வித்தியாசம்? .
Labels:
பத்திரிக்கை செய்தி
அன்று குழந்தைதொழிலாளி , இன்று டாக்டர் .
குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பெற்றோருடன்
கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர், இன்று மருத்துவப் படிப்பில் இடம்
பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடைச் சேர்ந்த மீட்கப்பட்ட சிறார் தொழிலாளி கார்த்திக்தான் அவர். மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் வியாழக்கிழமை பங்கேற்ற அவருக்கு சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடைச் சேர்ந்த மீட்கப்பட்ட சிறார் தொழிலாளி கார்த்திக்தான் அவர். மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் வியாழக்கிழமை பங்கேற்ற அவருக்கு சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்:
மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி
பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர்,
பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.நடப்பு கல்வியாண்டில்,
மாற்றுத்திறனாளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில்,
மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளிகளை உருவாக்க, மாவட்ட
கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்டத்திற்கு, ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து, அதை
மாற்றுத்திறன் கொண்டவர்கள், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும்
வகையில், வகுப்பறை சூழலை மாற்றுதல், சிறப்பு ஆசிரியர் நியமனம், சிறப்பு
வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், குடிநீர் வசதி, சாய்தளங்கள் போன்றவற்றை
ஏற்படுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
Labels:
SSA,
பள்ளிக் கல்வி
மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி
மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ஏற்றும் POWER
FINANCE (SPECIAL CASH INCENTIVE) இணையதள முகவரி நம் தளத்தில்
GOVT LINKS பகுதியில் நிரந்தமாக இணைக்கப்பட்டுள்ளது
இணையதள முகவரி : www.dse.ssasoft.in
Labels:
பள்ளிக் கல்வி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்
வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம்
தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர்
பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது.
இந்த பண்டுகளில் முதலீட்டை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. வருங்கால
வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் கே.கே.ஜலான் குறிப்பிடும்போது வருங்கால
வைப்பு நிதியின் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியிலிருந்து 5 சதவீத
தொகையை நடப்பாண்டில் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகக்
கூறினார்.
Labels:
CPS
107 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: 6ம் வகுப்பில் புதிதாக துவங்க உத்தரவு
கோவை :கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், 107 அரசு உயர்நிலை
மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கென தனிவகுப்பு
துவங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும்
ஆங்கிலவழிக்கல்வி நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து,
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பில்
ஆங்கில வழிக்கல்வி துவக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரால்
உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில், ஊரக பகுதி
மாணவர்களின் ஆங்கிலத்திறன் மேம்பாட்டுக்காக மாநில அளவில், 165 அரசு
உயர்நிலை மேல்நிலை பள்ளிகளிலும், 2013-14ல், 1,048 பள்ளிகளிலும், 2014-15ம்
கல்வியாண்டில் 1,485 பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, ஆறாம் வகுப்பில்
துவங்கப்பட்டது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
பள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு
கோவை
:யோகா பயிற்சிகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி
ஆசிரியர்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, யோகா
பயிற்சியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த, 2014ம்
ஆண்டு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிகளில் முறையாக பின்பற்றப்படவில்லை. தற்போது, முன்பு வெளியிட்ட
அரசாணையின் படி, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், யோகா
பயிற்சியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
புதுடெல்லி:
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு
இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு
மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய
மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில்
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது
குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை
மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால்
பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில
அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
Labels:
பத்திரிக்கை செய்தி
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்
உயர்கல்வியில்,
நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை
குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும்
கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை
பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய
மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால்,
பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக்
கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன.
Labels:
UNIVERSITY
பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி
தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும்
வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10
முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 5ம்
வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு 10 நிமிடங்கள் யோகா
பயிற்சியும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலை இறைவணக்கத்தை தொடர்ந்து 5
நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் கற்றுத்தரவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர்
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல்
காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்
பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற
கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இதையடுத்து 2014ல் நீதிமன்ற
ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து)
மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்தது.
ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப்
பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும்
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக
அந்த அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கில், தனியார்
பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் தவிர்த்துவிட்டு, பிளஸ் 2 பாடங்களை
மட்டும் நடத்துவதால் பொறியியல் முதலாண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள்
தோல்வி அடைகிறார்கள் என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்
பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம்
செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை
தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை
திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள்
Labels:
பள்ளிக் கல்வி
அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 1962-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிகளில் இப்போது திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதாக சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் கடந்த 1962-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றி பிற ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்துமே மெட்ராஸ் முதியோர் ஓய்வூதிய விதிகள் 1962-ஐப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 1962-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிகளில் இப்போது திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதாக சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் கடந்த 1962-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றி பிற ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்துமே மெட்ராஸ் முதியோர் ஓய்வூதிய விதிகள் 1962-ஐப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விதிகளில் உள்ள நிபந்தனைகள் தற்காலத்துக்குப் பொருந்தாத சூழ்நிலையில், அவற்றில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பயனாளிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமூகநலத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
Labels:
பத்திரிக்கை செய்தி
அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி
'அனைத்து
அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள
வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு
அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில்
நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள்
வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம்
கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
42 ஆயிரம் பணியாளர் தேவை: சத்துணவு மையங்களில்
'தமிழகத்தில், பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், காலியாக
உள்ள, 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நல சங்க மாநில தலைவர் வரதராஜன் கூறியதாவது:
அரசு திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பணியில், சத்துணவு மற்றும்
அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நான்கு ஆண்டுகளாக, காலி
பணியிடங்களை நிரப்பவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கவனிப்பதால்,
அரசின் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
Labels:
பத்திரிக்கை செய்தி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது
காஞ்சிபுரம்
மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு
சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அஸ்தினாபுரம் அரசு
உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பரத்குமார்,
எம்.பாலாஜி, எம்.அபுதாகீர், அருண்குமார், 8-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ்
ஆகியோர் தங்களது கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கணினிப்
பயிற்சி அளித்து வருகின்றனர்.
Labels:
பள்ளிக் கல்வி
தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!
யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
Labels:
வரலாற்று சுவடுகள்
TCS நிறுவனத்தில் B.Com, BBA, BBM, BA, BMS, B. Pharm, B.Sc பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது
. இதற்க்கான நேர்முகத் தேர்வு
சென்னையில் ஜூன்-26 அன்று நடைபெற உள்ளது.
மேலதிக தகவல்கள் :
Eligibility:
மேலதிக தகவல்கள் :
Eligibility:
Any Arts & Science graduates -2014 Pass outs Graduates B.Com/ B.B.A/ B.B.M/ BA/ BMS/B. Pharm/BSc are eligible
BSc Except Statistics / ISM/Computer Science / IT & BA Except Economics
B.E, B.Tech, BCA, MBA, MSc, MCA, M.Com, M.A, BSc IT, MSc IT & M.Tech is not eligible.
Minimum 15yrs of regular education (10th + 12th + 3 years Graduation).
Not more than 2 years of gap in Graduation.
BSc Except Statistics / ISM/Computer Science / IT & BA Except Economics
B.E, B.Tech, BCA, MBA, MSc, MCA, M.Com, M.A, BSc IT, MSc IT & M.Tech is not eligible.
Minimum 15yrs of regular education (10th + 12th + 3 years Graduation).
Not more than 2 years of gap in Graduation.
கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் எதிரொலியே இந்த அறிவிப்பு.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
'எக்ஸ்ட்ரா லக்கேஜ்':
இனிமேல் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும், 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' ஆக, கூடுதலாக ஒரு, ஹெல்மெட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
Labels:
பத்திரிக்கை செய்தி
எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
'இந்த
கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான
கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என சென்னை உயர்
நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களை
மட்டுமே அனுமதிக்க வேண்டும்; முந்தைய ஆண்டுகளில் முடித்தவர்களை
அனுமதிக்கக் கூடாது' எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும்
மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
Labels:
UNIVERSITY
பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
இந்த
ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு
செய்துள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு
அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு
வகுப்பும் இருந்தது.
வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
Labels:
தொடக்க கல்வி
அரசு பள்ளிகளிலும் யோகா கற்று கொடுக்கப்படும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேச்சு
விரைவில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி
குழந்தைகளுக்கும், ஈஷா மையம் சார்பில், யோகா கற்றுத் தரப்படும், என, ஈஷா
யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார். சர்வதேச யோகா தினத்தையொட்டி,
சென்னையில், நேற்று, 25 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியை, மத்திய
அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்து பேசியதாவது:
177 நாடுகள்: பல்லாயிரம் ஆண்டுகளாக நம்
சாதுக்கள், குருமார்கள் சொல்லிக் கொடுத்து வந்ததை, இன்று, சத்குரு
அனைவருக்கும் வழங்கி வருகிறார். 177 நாடுகள் சர்வதேச யோகா தினத்திற்கு
ஆதரவு தெரிவித்துள்ளன. யோகா, உடலுக்கும், மனதிற்கும் சிறந்த பயிற்சி;
உடலிலும், மனதிலும் ஒழுக்கம் ஏற்படுகிறது.
நான் பங்கேற்பது அரசு நிகழ்ச்சியல்ல; ஈஷா
அமைப்பு சிறப்பாக கொண்டாடிய சர்வதேச யோகா தினம் இது. ஜக்கி வாசுதேவ்
மக்களுக்கு சொல்லித்தரும் விதம் என்னை வரவழைத்துள்ளது. எனக்கும்,
ஆர்.எஸ்.எஸ்., மூலம், முன்பே யோகா கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
கிடைத்தது.இவ்வாறு அவர் பேசினார்.
Labels:
பத்திரிக்கை செய்தி
தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை
தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.
இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது.
இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதில் என்.சி.டி.இ. உறுதியாக இருந்தது.
தொடர் இழுபறி காரணமாக வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டாகவே இருக்குமா அல்லத இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.
Labels:
UNIVERSITY
7 வது ஊதியக்குழு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு -01.01.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ,இதுவரை அறிந்திராத சலுகைகள் கிடைக்குமா ???
One of the well known federation of the Central Government Employees working under Defence establishments, INDWF published the detailed discussion points in the meeting between the NC JCM Standing Committee and 7th Central Pay Commission held on 9.6.2015 on its official blog today.
The content of the post is reproduced and given below for your information…
INTUC
INDIAN NATIONAL DEFENCE WORKERS FEDERATION
ESTD 1959 (Recognised by Govt. of India)
R. Srinivasan
General Secretary
INDWF/Circular/020/2015
Date 09/06/2015
To
All Affiliated Unions of INDWF
Dear Colleagues,
On 09.06.2015 a meeting was attended by the Standing Committee members of National Council, JCM with the 7th Central Pay Commission at Pay commission office, New Delhi. Representatives of the following organisations have participated
NFIR, AIRF, INDWF, AIDEF, Audit & Accounts, Income Tax Association, Postal
Labels:
PAY COMMISSION
தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் மாவட்ட கல்வி அதிகாரி பதவி உயர்வு
பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
Labels:
பள்ளிக் கல்வி
குறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் முறையிட மாணவர்கள் முடிவு
Labels:
பள்ளிக் கல்வி
பள்ளிகளில் பெயரளவில் செயல்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகம்
பெற்றோர்-ஆசிரியர் கழகம் பெயரளவில் அன்றி, பள்ளி வளர்ச்சிக்கு
பாடுபடுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில்
திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:
தமிழக அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து தனியார் சுயநிதி
பள்ளிகளிலும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை
உறுதிப்படுத்த வேண்டும்.
Labels:
தொடக்க கல்வி,
பள்ளிக் கல்வி
தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு
யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு
தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று
கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற
உயர்மட்ட பட்டங்களை பெறும் வகையில் படிப்புகளை வழங்குவது குறித்து,
யு.ஜி.சி., தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டம்
அமல்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் அடுத்த
கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு, வேதபிரகாஷ் கூறினார். தொலைதுாரக்
கல்வி முறையில், எம்.பில்., -
பிஎச்.டி., போன்ற பட்டப்படிப்புகளை வழங்க
நடவடிக்கை எடுப்பதாக, நான்கு ஆண்டுக்கு முன், யு.ஜ.சி., உறுதி
அளித்திருந்தது. அதன்படி, இத்திட்டத்தை அமல்படுத்த, யு.ஜி.சி., தீவிரம்
காட்டத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Labels:
UNIVERSITY
எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள்
வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக
எழுதி தேர்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு
உள்ளது.
மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள்
கூறியதாவது:பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், உயர்கல்வி கற்க
முடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை,
எப்போது வேண்டுமானாலும், நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும்
எழுதி, தேர்ச்சி அடைவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த
திட்டத்தின்படி, ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களையும் எழுத வேண்டிய
அவசியமில்லை. தங்கள் வசதிக்கேற்ப, ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்ச்சி பெறலாம்.
இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு:கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது
இடைநிலை
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று
வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக ஒற்றைச்சாளர முறையில் ஜூலை 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக ஒற்றைச்சாளர முறையில் ஜூலை 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Labels:
தொடக்க கல்வி
சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு
கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும்
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்கக நண்பர்கள் சார்பில், புதிய
சங்கம் தொடக்க விழா, நிர்வாகிகள் தேர்வு மற்றும் பணி ஓய்வுப்
பெற்றவர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில்
சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து
பள்ளிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணி கடந்த சில நாள்களாக
நடைபெற்றுள்ளது. இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து,
சில பள்ளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.
Labels:
பள்ளிக் கல்வி
பொதுமக்கள் தங்கமாக வாங்குவதை தவிர்க்க புதிய திட்டம்: தங்க பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு
புதுடில்லி: பொதுமக்களின் தங்க தாகத்திற்கு தடை போட்டு, பொருளாதார
ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக, தங்க பத்திரங்களை வெளியிட, மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இந்த பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து,
முதிர்ச்சியின் போது, தங்கத்திற்கு ஈடாக பணம் பெற வசதி செய்யப்பட உள்ளது.
தங்கத்தின் மீதான தணியாத ஆசையால், முடிந்த அளவுக்கு தங்கத்தை வீட்டில்
இருப்பு வைத்துக் கொள்வதை நம்மவர்கள் வழக்கமாக கொண்டுஉள்ளனர். அவசர
காலத்தில், எளிதாக பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதால், பொதுமக்கள் தங்களின்
முதலீட்டில், தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால்,
மறைமுகமாக, மத்திய அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பண்டிகை
மற்றும் விசேஷ நாட்களில், பெரும்பாலானோர் தங்கம் வாங்க முன்வருவதால், ஏராள
மான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிடுகிறது. அத்தகைய
நேரங்களில்,
Labels:
பத்திரிக்கை செய்தி
பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை
வெளியிடப்பட்டன. இதையடுத்து, மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகம், அதன் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில்
நடத்தப்பட்ட ஏப்ரல்-மே பருவத்துக்கான பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்
படிப்புகளின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து
கொள்ளலாம் என துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.
அதேபோல், சிறப்புத் துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடத்தப்படும்
எனவும், இதற்குத் தகுதியுள்ள மாணவர்கள் ஜூலை 10-ஆம் தேதிக்குள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
சி.ஆர்.கிளாடிஸ் லீமாரோஸ் தெரிவித்துள்ளார்.
Labels:
UNIVERSITY
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் பதிவெண் பெறாதோருக்கு சலுகை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்
இணைந்து பதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர்
க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம்,
கருவூலம்- கணக்குத் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் இணைவோருக்கு கருவூலத் துறை மூலம் பதிவெண்
வழங்கப்படும். இந்த நிலையில், இதில் இணையாதவர்களுக்கும், திட்டத்தில்
இணைந்து பதிவெண் பெறாதோருக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்துள்ளவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தாது. பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளோர், அவர்களுக்கு பதிவெண் வழங்கப்படுவது
குறித்த அறிக்கைகளை கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர், மாநில தரவு மைய
ஆணையர் ஆகியோர் மாதத்துக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும் என்று நிதித் துறை
செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
CPS
சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் நாளை தொடங்க உள்ள மருத்துவ
படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது
என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அதே சமயம் கவுன்சிலிங்கிற்கு வரும்
மாணவர்களுக்கான, சேர்க்கை அனுமதி கடிதத்தை வழங்கக்கூடாது என்றும்
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு
ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே மத்திய அரசின் சி.பி.எஸ்.இ
பிரிவில் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Labels:
UNIVERSITY
சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்
சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக
ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை
ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சங்கத்தின் மாவட்ட ஆண்டு பேரவைக்
கூட்டம் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாரங்கன்
தலைமை வகித்தார். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:
சத்துணவு ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக
ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்தத்
தொகை, சிறப்பு சேமநிதி ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை
உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்
தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். 2006-க்கு முன் ஓய்வு
பெற்றவர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் தர ஊதியத்தையும் இணைத்து
குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Labels:
ASSOCIATION NEWS
பிளஸ் 1 வகுப்புக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்'
பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை,
'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள்
இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும், 30ம் தேதி
வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு
உள்ளனர்.பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில்,
பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.
இதற்கு தயாராகும் வகையில், இடைநிலைக்
கல்விக்கும், மேல்நிலைக் கல்விக்கும் உள்ள பாடத்திட்ட வித்தியாசங்கள்
மற்றும் பழைய பாடத்திட்ட திருப்புதல் அடங்கிய, பிரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகள்
நடத்த அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.'பிரிட்ஜ் கோர்ஸ் முடிவதற்குள், பிளஸ் 1
வகுப்புகளுக்கான அனைத்து மொழிப்பாடம் மற்றும் பாடப் புத்தகங்கள்,
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Labels:
பள்ளிக் கல்வி
Subscribe to:
Posts (Atom)