Breaking News

வராற்றுச் சுவடுகள்-அலெக்ஸôண்டர் பிளெமிங்.

இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள் காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன் புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே பிளெமிங் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.
இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.
ந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.