கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது
v.நாங்கூர் என்னும் கிராமம்.இந்த குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமையாசிரியர் ஒருவர் தான் பணியில் உள்ளார்.அங்கு பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றுவிட்டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது.சுமார் 35 மாணவர்கள் அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.அலுவலக வேலை நிமித்தம் தலைமையாசிரியர் வெளியில் செல்லும்போது அருகில் உள்ள பள்ளியில் இருந்து மாற்றுப்பணிக்கு ஆசிரியர் அனுப்பிவைக்கப்படுகின்றார்.தலைமையாசிரியர் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக நிரந்தர மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி பலமுறை உதவிதொடக்க கல்வி அலுவலரிடம் மனுகொடுத்தும் இதுவரை மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.இதனால் மாணவர்களின் கல்வித்திறன் குறைகிறது.இந்தப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வி.நாங்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிப்பள்ளிக்கு மாற்றுப்பணி ஆசிரியரை விரைந்து நியமிக்கவேண்டும் என்று ஊர்பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.