Breaking News

தொடக்க கல்வித்துறை -முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு- தகுதி காண் பருவம் -உண்மைநிலை விளக்கம்.

தொடக்க கல்வரித்துறை -  முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் ஒன்றியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட நாளினை கொண்டுதான் பட்டியலில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். 

தகுதி காண் பருவம் முடித்த தேதியின் அடிப்படையில்  முன்னுரிமை  நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எந்த அரசாணையும் இல்லை.

மேலும் தொ.க. இ. செயல்முறை ந.க. எண்.36679/டி3/08 ல் TRB ஆசிரியர்களின் முன்னுரிமை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது தகுதி காண் பருவம் முடித்த தேதி என குறிப்பிடப்படவில்லை.


அதாவது 1.6.2006 ல் ஒன்றியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியருக்கு  முன்னுரிமை நிர்ணயம் செய்யும் போது பணிநியமனம் செய்யப்பட்ட 1.6.2006 தேதியைதான் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர அவர் தகுதிகாண் பருவம் முடித்த தேதியை கருத வேண்டியதில்லை.


ஆனால் சில இயக்கங்கள் தகுதி காண் பருவத்தை கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும் பல இடங்களில் குழப்பம் செய்து வருகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட இயக்குனரின் செயல்முறைகளை குறிப்பிட்டு பல ஊடகங்களில் செய்தியை பரப்புகின்றனர். இணையதளங்களும் அத்தவறான செய்தியை வெளியிடுகின்றன.

இதுகுறித்து நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு  4 ஆண்டுகளுக்கு முன்பே போராடி பல பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலை தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற வழிவகை செய்தது 


இதை அனைத்து நண்பர்களும் மனதில் முன்னுரிமை நிர்ணயம் செய்வதில் குழப்பம் வந்தால் துணிந்து எடுத்துரைத்து முன்னுரிமை பட்டியலில் நம் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமையை  நிலைநிறுத்தவும் . குழப்பம் வந்தால் மாநில பொதுச்செயலாளர் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: நண்பர்கள் நமது TNGTF 2013 ஆண்டு அரசாணை தொகுப்பு புத்தகம் பக்கம் 182 முதல் 190 வரை உள்ள இயக்குனரின் செயல்முறைகளை படித்து பார்க்க.
நமது TNGTF பெற்ற RTI தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி!!

விழிப்புடன் இருப்போம்.!!!!