Breaking News

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்


சென்னை: காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் பாலச்சந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். வணிகவியல், பொருளியல் படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி காலியிடங்களை, தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.