Breaking News

பொதுத்துறை வங்கியில் 4122 அதிகாரி பணி

ஐ.பி.பி.எஸ்., அமைப்பு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் நடத்தி ஆண்டுதோறும் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. தற்சமயம் பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 4122 சிறப்பு அதிகாரிகள் - (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்) இடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம் : ஐ.டி., ஆபிசரில் 335ம், அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசரில் 2 ஆயிரத்து 580ம், ராஜ்பாஷா அதிகாரி பிரிவில் 65ம், லா ஆபிசரில் 115ம், எச்.ஆர்., பெர்சானலில் 81ம், மார்க்கெட்டிங் ஆபிசரில் 946ம் சேர்த்து மொத்தம் 4122 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

வயது : 01.11.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.11.1986க்குப் பின்னரும், 01.11.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஐ.டி., பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சி.எஸ்.இ., ஐ.டி., இ.சி.இ., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நான்கு வருட பட்டப் படிப்பை அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பென்டரி, வெர்டினரி சயின்ஸ் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். ராஜ்பாஷா அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியில் பட்டப் படிப்பை ஆங்கில மொழியுடன் படித்திருக்க வேண்டும். லா ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு பார்கவுன்சிலில் பதிவும் செய்திருக்க வேண்டும். எச்.ஆர்., பெர்சானல் பதவிக்கு 
விண்ணப்பிப்பவர்கள் முது நிலைப் பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் அல்லது எம்.எம்.எஸ்., பி.ஜி.டி.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம்., பி.ஜி.பி.எம்., பி.ஜி.டி.எம்., போன்ற இரண்டு வருட படிப்பை முழு நேரப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600/-ஐ இந்தப் பொது எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி : ஆன்-லைன் முறையில் ஐ.பி.பி.எஸ்., தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
 2016, டிச., 2.

விபரங்களுக்குwww.ibps.in/