Breaking News

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு


குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.ஒரு மாணவருக்கு, 5ம் வகுப்பு வரை, தலா, 100 கிராம் அரிசியும்; 6 முதல், 10 வரை, 150 கிராம் அரிசியும் ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை மத்திய அரசும்; 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, மாநில அரசும், அரிசி செலவை ஏற்கின்றன. மளிகை பொருட்கள்

உள்ளிட்ட மற்ற செலவுகளில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை தமிழக அரசும் வழங்குகின்றன. முட்டை செலவை, தமிழக அரசே ஏற்கிறது.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, புதிய விதிமுறைகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:உணவு தானியம், எரிபொருள், சமையல் பணியாளர் இல்லை போன்ற காரணத்தால், ஏதாவது ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படாவிட்டால், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், அதற்கான தொகையை, குறிப்பிட்ட பள்ளிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்

தரத்தை உறுதிப்படுத்த, சத்துணவை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்; இதற்காக, மாதம் ஒரு பள்ளியை தேர்வு செய்ய வேண்டும்

ஒவ்வொரு பள்ளியிலும், சுகாதாரமான சமையல் அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த விதிமுறைகளை அமல்படுத்த, சத்துணவு அமைப்
பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து, சத்துணவு அமைப்பாளர் சங்க தலைவர்
பழனிச்சாமி கூறியதாவது:மதிய உணவு வழங்காத நாளில், அதற்கான செலவு தொகையை, பள்ளிக்கு ஒதுக்க வேண்டும்; அந்த தொகையை, மாணவர்களுக்கு செலவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையை, பள்ளிக்கு வழங்குவதில், ஊழல் நடக்கிறது; ஊழல் செய்வதற்காகவே, வேண்டுமென்றே சமையல் செய்யாமலிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சத்துணவு திட்டம் பாதிக்கப்படும். மேலும், பணம் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பதை மாணவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. அதிகாரிகளும், ஆசிரியர்களும் சேர்ந்து, ஊழல் செய்ய வாய்ப்பு அதிகம். எனவே, மத்திய அரசின் புதிய விதிமுறைகள், நடை
முறைக்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்