வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பள்ளிகளின் சிறப்புகளை முதன்மைப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவைதவிர, இடைநிலை வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பள்ளியின் மீதான விருப்பத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு, வரும் கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.தங்களின் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை ஆசிரியர்கள் முக்கியப்பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.கிராமப்புற பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உத்தரவு வழங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.