சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில்,ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி
நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜாவிடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்குஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி,பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10:00மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள,ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வுநடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம்அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன்ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.