Breaking News

மொபைல் போன் பேட்டரி சிக்கனம் ஒரு தகவல்



உங்கள் மொபைல் போன்
பேட்டரியின் திறன்
அடிக்கடி தீர்ந்துவிடுகிறதா?
ஏதேனும் அழைப்பு ஒன்றைப்
பெற்றுப் பேசிக்
கொண்டிருக்கையிலேயே,
பேட்டரி ஆப் ஆகிவிடுவதால்,
பாதியிலேயே தொடர்பு அறுந்து போகிறதா?
உங்கள் மொபைல் போன்
பேட்டரியின் திறனைத் தக்க
வைத்துச் சீராகப் பயன்படுத்த
இங்கு சில குறிப்புகள்
தரப்படுகின்றன.
1. நீங்கள் செல்லுகின்ற இடம்
அல்லது ஊரில் உங்கள் மொபைல்
போனுக்கு சிக்னல் சரியாகக்
கிடைக்காது என்று எண்ணுகிறீர்களா?
உங்கள் மொபைல் போனை ஸ்விட்ச்
ஆப் செய்வது நல்லது. ஏனென்றால்,
எப்படியாவது ஒரு நெட்வொர்க்கினைப்
பிடிக்கும் முயற்சியில், உங்கள்
மொபைல் போன் தன் பேட்டரியின்
அதிக திறனைச் செலவழிக்கும்.
இறுதியில், தானே ஆப்
ஆகிவிடும்.
2. இது போன்ற சூழ்நிலையில்,
அதாவது சிக்னல் கிடைக்காமல்,
அழைப்புகளை இணைக்க
முடியாதபோது, மொபைல்
போனில் உள்ள காலண்டர், நோட்ஸ்
பயன்படுத்தவும், ஆங்கிரி பேர்ட்ஸ்
போன்ற
விளையாட்டுக்களை விளையாடவும்
விரும்புகிறீர்களா?
அப்படியானால், போனை "airplane
mode" என்ற நிலைக்கு மாற்றவும்.
இந்த நிலையில், எந்த அழைப்பும்
உங்கள் போனுக்குக் கிடைக்காது.
ஆனால், நீங்கள் மேற்கொள்ள
விரும்பும் பிற சேவைகளைப்
பயன்படுத்தலாம்.
3. உங்களுக்குத் தேவை இல்லாத
நேரத்தில் Bluetooth, GPS, Wi-Fi, mobile
data ஆகிய வசதிகளை நிறுத்தி (off)
வைக்கவும். ஏனென்றால்,
தொடர்ந்து இவற்றை இயங்க
வைத்துக் கொண்டிருப்பது, உங்கள்
பேட்டரியின்
திறனை உறிஞ்சிவிடும்.
4. உங்கள் மொபைல் போன்
திரையின் காட்சித்
திரையினை சற்று வெளிச்சம்
குறைவாகவே வைக்கவும்.
பொதுவாகவே, மொபைல்
போனில் திரையின் காட்சிக்கான
வெளிச்சத்தைக்
கட்டுப்படுத்தி வைக்க "auto" setting
தரப்பட்டிருக்கும்.
இதனை முடக்கிவிட்டு, நீங்களாக
செட்டிங்ஸ் அமைக்கும்
வழியினைப் பின்பற்றவும்.
அப்போதுதான், குறைவான
வெளிச்ச டிஸ்பிளே அமைக்க
முடியும். தேவைப்பட்டால்,
சற்று அதிகரித்துக் கொள்ளவும்
முடியும். இதனால்,
தொடர்ந்து பேட்டரியின் திறன்
அதிகம்
பயன்படுத்தப்படுவது குறையும்.
5. மொபைல் போனில்,
பின்புலத்தில் சில
அப்ளிகேஷன்கள் இயங்கிக்
கொண்டு இருக்கும். எடுத்துக்
காட்டாக, உங்களுக்கு வரும் மின்
அஞ்சல்களைக் காணும் ஆர்வத்தில்
அதனைத் தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்கும் வகையில்
அமைத்திருக்கலாம்.
அல்லது ஏதேனும் சமுதாய
இணைய தளத்தில் வரும்
செய்திகளுக்காக, அதனையும்
இயக்கி வைத்திருக்கலாம்.
இவற்றை எல்லாம், குறிப்பிட்ட கால
அவகாசத்தில் ஒரே முயற்சியில்
காணலாமே! எனவே,
அவற்றை நிறுத்தி, இயங்காமல்
வைக்கலாம். இதனால், பேட்டரியின்
திறன் வீணாவது தடுக்கப்படும்.
6. மொபைல் போன்கள்
பயன்படுத்தி போட்டோ எடுப்பது இப்போது அடிக்கடி மேற்கொள்ளப்படும்
சாதாரண விஷயமாகிவிட்டது.
இதனைச் சற்றுத் திட்டமிடலாம்.
தேவையற்ற நேரத்தில்,
போட்டோ மற்றும்
வீடியோ எடுக்காத நேரத்தில் இந்த
அப்ளிகேஷன்களை நிறுத்தி வைக்கலாம்.
சிலர், இதற்காக அடிக்கடி இந்த
அப்ளிகேஷன்களை ஆப் மற்றும் ஆன்
செய்வார்கள். உடனுடக்குடன்
இவற்றை இயக்கவும்,
இயக்கத்தினை முடிக்கவும்
செய்தால், அதற்கான பேட்டரி திறன்
மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும்.
வீனாகும். எனவே, இந்த
அப்ளிகேஷன்களைத் தேவைப்படும்
போது மட்டும்
இயக்குவது பேட்டரிக்கு அதிக
வாழ்நாட்கள் கொடுக்கும்.
7. உங்களுடைய பேட்டரி திறன்
குறைந்து காணப்படுகிறதா?
அப்படியானால், அடுத்து அதனை ரீ
சார்ஜ் செய்திடும் வரை,
சற்று பேச்சைக் குறைத்துக்
கொள்ளுங்கள். அப்போதுதான்
முக்கியமான தகவலைத் தரும்
நபர்கள், உங்களுடன்
தொடர்பு கொள்ள
முயற்சிக்கையில், நீங்கள்
தொடர்பு கொள்ள பேட்டரி பவருடன்
இருக்கும். அல்லது, மீண்டும் சார்ஜ்
செய்திடும் வரை,
இவ்வாறு அழைக்கும்
நபர்களுக்கு சிறிய அளவில்,
மீண்டும் அவர்களைத்
தொடர்பு கொள்வதாக, டெக்ஸ்ட்
மெசேஜ் அனுப்பவும். அவர்கள்,
உங்கள் நிலையை உணர்ந்து,
உங்களை தொடர்ந்து அழைத்து சிரமப்படுத்த
மாட்டார்கள்