Breaking News

மாலை, 6:00 மணிக்கு மேல்சிறப்பு வகுப்பு கூடாது: அரசு கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை கண்டித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:

* அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வில் வெற்றி பெற செய்வதே, நம் நோக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களை, காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வரவழைத்து, குறிப்பிட்ட ஆசிரியர்களைக் கொண்டு அமைதியாக படிக்கச் செய்ய வேண்டும்.


* திறமையான மாணவர் தலைமையில் நடுநிலை, கடைநிலை மாணவரும் இடம்பெறும் வகையில் குழு பிரிக்க வேண்டும். அந்த குழுவுக்கு, தினமும் படிக்க வேண்டிய பகுதிகளை பாட ஆசிரியர் பிரித்து தரவேண்டும்.


* சிறு வினா, குறுவினா, பெருவினா, மனப்பாட பகுதிகளை ஒப்புவித்து, பின் எழுதி காட்டச் செய்து ஆசிரியர் திருத்த வேண்டும்.


* எந்தக் காரணத்தை முன்னிட்டும், பள்ளி வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்