Breaking News

'ஸ்மார்ட் கிளாஸ்'களாகும் நடுநிலைப் பள்ளிகள்: உயர்நிலை பள்ளிகள் புறக்கணிப்பு


அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் 'புரஜெக்டர்' வசதியுடன் 'ஸ்மார்ட் கிளாஸ்' களாக மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், உயர்நிலை பள்ளிகளில் இவ்வசதியின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் தவிக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 5 டெஸ்க்டாப், ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 5 லேப்டாப், இன்டர்நெட் வசதி, ரூ.35 ஆயிரத்தில் புரஜெக்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 'டி.வி.டி', பிளேயர்களும் வழங்கியுள்ளனர். மதிய வேளையில் மாணவர்கள் இவ்வசதிகளை பயன்படுத்துகின்றனர். ஆறு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை கல்வியை பெறுகின்றனர். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத் தின் கீழ் உயர்நிலை பள்ளிகளில் இந்த வசதிகள் செய்துதரப்படவில்லை. இதன் காரணமாக நடுநிலையில் இருந்து உயர்நிலை பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களால் கம்ப்யூட்டர் கல்வியை தொடர முடியவில்லை. பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விபரத்தை கூட கம்ப்யூட்டரில் ஏற்ற முடியாமல் பல பள்ளிகள் தவிக்கின்றன. உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: எஸ்.எஸ்.ஏ., சார்பில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு பல வசதிகள் உள்ளன. அதில், முக்கியமானது 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம். ஆனால், உயர்நிலை பள்ளிகளுக்கு ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் வசதிகள் செய்துதரவில்லை, என்றார்.