Breaking News

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி


அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜன.31) கடைசித் தேதியாகும். இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீதத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 


வருகிற 2015-ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 3-ஆம் தேதி நடத்தப்படஉள்ளது.காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். இவை அனைத்தும் "அப்ஜெக்டிவ் (கொள்குறி) வகை தேர்வுமுறைக் கேள்விகளாக இருக்கும்.இதற்கு விண்ணப்பிக்கக் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியோடு கால அவகாசம் முடிந்து விட்டபோதும், தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை www.aipmt.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.