Breaking News

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு

சகோதர, சகோதரிகளே, 21.8.2014 ஆம் தேதியன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு எண் 06/2014 -ல்ஆதிதிராவிட நலத்துறையின் கீழ்உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற SC & SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் பிரமலை-கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமலை-கள்ளர் சமுகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும்என்றும் அறிவிப்பு வெளியானது.



ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இது நாள் வரை ஆதிதிராவிட நலப்பள்ளிகள் மற்றும் கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 669+64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும்இது வரை நிரப்பப்படவில்லை. 

இக்கால தாமதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் நிலுவையிலுள்ள ராமர் (வழக்கு எண்:WP(MD)16547) மற்றும் சுடலைமணி(வழக்கு எண்: WP(MD) 17255) ஆகிய இருவர் தொடுத்த வழக்குகளே காரணம்என தெரிகிறது. இது குறித்து கடந்த13/10/14மற்றும்14.11.2014அன்றும் இதை சார்ந்த அனைத்து துறை செயலர்கள், இயக்குனர்கள்மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம். அதிலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. இந்த இரு வழக்குகளிலும் நாங்களும் ஒரு வாதியாக இணைந்தும் இன்னும் முடிவு எட்டப்படாமலே உள்ளது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. ஆகையால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும்ஜனவரி 29 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து அனுமதி பெற்றுள்ளோம். இதில் தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு வழக்கினை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். நமது பணியை பெறநாம் நமது பலத்தினை காட்டுவோம்.

நாள் ; 29/01/2015
இடம் ; சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை.
நேரம் ; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.