Breaking News

TNPSC STUDY METERIAL - GEOGRAPHY

TNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு



இந்த பக்கத்தை download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்
இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு
புவியியல் அடிப்படையில் இந்தியா தீபகற்பம் எனப்படுகிறது. காரணம் இந்தியா மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும்(இமயமலை) சூழப்பட்டுள்ளது.
புவியின் அடிப்படையில் நோக்கும்போது இந்தியாவை ஒரு கண்டமாகவே கருதலாம். எனினும் அதன் பரப்புக்குறைவால் இதனை துணைக்கண்டம் என்பர்.

இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடாக உலக அரங்கில் இடம் பெற்றுள்ளது. ரஷ்யா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
புவியின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பெற்றுள்ளதுடன், 17 சதவீத மக்கள் தொகையையும் பெற்றுள்ளது. இந்தியாவைப் போல் 7 மடங்கு பெரிய நாடாக ரஷ்யா விளங்குகிறது.
ஜப்பான் நாட்டைவிட 9 மடங்கு இந்தியா பெரியது. இங்கிலாந்தைப்போல் 13 மடங்கு பெரிய நாடு இந்தியா.
இந்தியாவின் பரப்பு பாகிஸ்தானை விட நான்கு மடங் கு அதிகம். அவ்வாறே அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இந்தியா ஆகும்.
இந்தியா புவியின்  வட அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திற்கும், குஜராத்திற்கும் இடையில் தல நேரத்தில் 2 மணி நேரம் வேறுபாடு தோன்றுமளவிற்கு இந்தியா மிகப்பெரியது.
அருணாச்சலப்பிரதேசத்தில் சூரியன் தோன்றிய பின், சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே குஜராத்தில் சூரியன் தோன்றுகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையாக இமயமலைகள் விளங்குகிறது. இவ்விரு நாடுகளையும் மக்மோகன் எல்லைக்கோடு பிரிக்கிறது. இக்கோடு இமயமலைகளின் ஊடாகச் செல்கிறது.
பாக்ஜலசந்தி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லையாக சிரில் ராட்கிளிஃப் எல்லைக்கோடு விளங்குகிறது.
மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காள வரிகுடாவும் உள்ளன.
அரபிக்கடலில் கேரளாக் கடற்கரையை ஒட்டி அமைந்த இலட்சத்தீவுகள் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவில் வடக்கு தெற்காக நீண்ட சங்கிலித் தொடராய் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியன இந்தியாவிற்குள் அடங்குகின்றன.
இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோ மீட்டராகும்.
இந்தியாவின் வடக்கு தெற்கு தூரம்3214 கிலோமீட்டர். கிழக்கு மேற்கு தூரம் 2933 கிலோ மாட்டர். தீவுகளை உள்ளடக்கிய இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர். (இதில் 5700 கிலோ மீட்டர் நீளம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளமாகும்).
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தியா அதிக அளவு எல்லையை வங்காள தேசத்துடன் கொண்டுள்ளது.
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்கள் 1. குஜராத் 2. ஆந்திரப்பிரதேசம்.
இந்தியா அமைந்துள்ள அட்ச ரேகை 80 4' 28'' வடக்கு முதல் 370 17' 53'' வடக்கு வரை.
இந்தியா அமைந்துள்ள தீர்க்க ரேகை 680 7' 53'' கிழக்கு முதல் 97024' 47'' கிழக்கு வரை.
*  230 1/2 டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது. கடக ரேகை செல்லும் மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், *  சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.
இந்தியாவின் திட்ட நேரம் கிழக்கு தீர்க்க ரேகை 82 1/20 ஆகும். கிரீன் வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரம் வேறுபடுகிறது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 43.3 சதவீதம் சமவெளிகளும், 10.7 சதவீதம்  மலைகளும், 18.6 சதவீதம் குன்றுகளும், 27.7 சதவீதம் பீடபூமிகளும் உள்ளன.
இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரி உள்ளது. இந்தியாவின் தென்கிழக்கே இந்திரா முனை உள்ளது.
இந்தியா வட அரைகோளப் பகுதியின் கிழக்குப் பகுதியல் உள்ளது.
இந்தியாவின் நுழைவாயில் எனப்படுவது மும்பை ஆகும். கடகரேகை இந்தியாவை தீபகற்ப இந்தியா, புறதீபகற்ப இந்தியா என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது.
வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு ஆகும். எனவே தான் வேற்றுமையிலுள்ளும் ஒற்றுமை என்று பண்டித ஜவகர்லால் நேருவின் கூற்றிற்கு இந்தியா இலக்கணமாக அமைந்துள்ளது.
இந்தியா - இயற்கையமைப்பு
* சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ் என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.
* புவியியல் கொள்கையின்படி, துவக்க காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது. அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.
* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒன்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.
* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.
* அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத் துணைக்கண்டமாகும்.
* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம் மற்றும் மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம் இயற்கை வட்டாரம் எனப்படும்.
* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஓர் நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.
* இந்தியாவின் இயற்கையமைப்பை 3 பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள் 2. வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள் 3.தீபகற்ப பீடபூமிப் பகுதி ஆகியன.
வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள்
* காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை கிழக்கு மேற்காக சுமார் 2500 கிமீ நீளம் வரை இமயமலைகள் சங்கிலித் தொடர் போன்று பரவியுள்ளது.
* அத்துடன் இவை சுமார் 150 முதல் 400 கிமீ அகலம் வரை உள்ளது. மேற்கில் சுமார் 400 கிமீ அகலத்துடனும், கிழக்கில் சமார் 150 கிமீ அகலத்துடனும் காணப்படுகிறது.
* இமயமலைகள் இந்தியாவிற்கு வடக்கில் ஓர் இயற்கை அரணாக அமைந்துள்ளது. இளம் மடிப்பு மலைகளால் (Young Fold Mountains) ஆனதே இமயமலைகள் ஆகும்.
* இமயமலை மத்திய ஆசியாவின் பாமீர் முடிச்சில் இருந்து, (பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது) தொடங்குகிறது.
* இந்த இமயமலைத் தொகுப்பை நாம் மூன்று உட்பிரிவுகளாகக் காண்போம். அவையான ) பெரும் இமாலயத் தொடர் (Greater Himalayas) .மத்திய இமாலயத் தொடர் (Middle Himalayas) . புற இமாலயத் தொடர் (Outer Himalayas)
பெரும் இமயமலைத் தொடர்கள்
* உலகின் உயர்ந்த மலைத்தொடர்கள் இங்குதான் உள்ளன. இவற்றிற்கு ஹிமாத்ரி தொடர் என்றும் வேறு பெயர் உண்டு காரகோரம், லடாக், கைலாயம், ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் உள்ளன.
* காரகோரம் மலைத்தொடரில் தான் காட்வின் ஆஸ்டின் அல்லது K2 என்ற உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 8611 மீட்டர் ஆகும்.
* K2 என்பது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ளது. கைபர் மற்றும் போலன் கணவாய்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன.
* இவை தவிர பால்ட்ரோ பனியாறு, சியாச்சின் பனியாறு போன்றவைகளாலும் இத்தொடர் புகழ் பெறுகிறது.
* மக்காலு, தவளகிரி, நங்க பர்வதம், நந்தா தேவி போன்ற பிற சிகரங்களும் இத்தொடரில் தான் அமைந்துள்ளன. மேலும் இத்தொடரில் சில முக்கியக் கணவாய்கள் உள்ளன.
* காஷ்மீரிலுள்ள காரகோரம், கணவாய், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஷிப்கிலா கணவாய், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பொம்டிலா கணவாய் ஆகிய குறிப்பிடத்தக்கவை.
* பெரும் இமாலயத் தொடர்கள் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஹிமம் என்றால் பனி என்று பொருள், ஹிமாலயா என்றால் பனியின் இருப்பிடம் என்று பொருள்.
* வடக்குப் பகுதியில் இத்தொடர்களில்தான் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் (8848 மீ) அமைந்தள்ளது. இது நேபாளத்தில் அமைந்துள்ளது. இதற்கு சாகர் மாதா என்றும் பெயர் வவங்கப்படும்.
* அத்துடன் கஞ்சன் ஜங்கா மலைத்தொடரில், 8598 மீ உயரமுடைய, இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்கா சிகரம் விளங்குகிறது. இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.
மத்திய இமயமலைத் தொடர்கள்
* ஹிமாச்சல் தொடர்கள் என்றும் இதற்கு வேறுபெயர் உண்டு. சுமார் 3000 முதல் 4500 மீட்டர் உயரமுடையவை.ஹிமாத்ரி தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது.
* பீர் பாஞ்சால், குமாயுன், மகாபாரத், திம்பு ஆகிய மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. இவற்றில் பீர் பாஞ்சால் தொடர் காஷ்மீரிலும், தவுளதார்தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத் தொடர் ஜம்மு-காஷ்மீரிலும், மகாபாரத்தொடர்கள் நேபாளத்திலும் அமைந்துள்ளன.
* புகழ்பெற்ற பீர்பாஞ்சால் மற்றும் காஷ்மீர் பள்ளதாக்கு இத்தொடரில் உள்ளன. இதில் அதிக  உயரத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் குல்மார்க் ஆகும்.
* மேலும் டல்ஹெளசி (இமாச்சலப் பிரதேசம்), தர்மசாலா, சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), முசெளரி (உத்திரப் பிரதேசம்), நைனிடால் (உத்திராஞ்சல்), டார்ஜிலிங் (மேற்கு வங்காளம்) ஆகிய கோடை வாசஸ்தலங்கள் அமைந்துள்ளன.
புற இமயமலைத் தொடர்கள்
* இமயமலைகளின் தெற்குமுனைப்பகுதி இது. சிவாலிக் கொடர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. சராசரியாக 1000 மீ உயரமுடையது. தராய் காடுகள் இங்கு காணப்படுகிறது.
* இத்தொடர் தொடர்சிசியற்றுக் காணப்படுகிறது. இத்தொடருக்கும், மத்திய இமாலயத் தொடருக்கும் இடையில் பல பள்ளத்தாக்குகள் உள்ளன. அவை டூன்கள் என்றழைக்கப்படுகின்றன.
* டேராடூன் அத்தகைய பள்ளத்தாக்கே ஆகும். இத்தொடரின் கிழக்குப் பகுதியில் பூர்வாஞ்சல் குன்றுகள் உள்ளன. மேலும் இத்தொடரில் தான் காசி குன்றுகள், காரோ குன்றுகள், ஜெயந்தியா குன்றுகள் ஆகியன மேகாலயாவில் அமைந்துள்ளன. இத்தொடரில் பெருமளவு மண்ணரிப்பு நடைபெறுகிறது.
* மேற்காணும் பிரிவுகள் போலவே இமயமலைகளை திசைகளை அடிப்படையாகக் கொண்டும் பிரிப்பர்.
* ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாலங்களிலுள்ள இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும், உத்திரப்பிரதேசம், நேபாளம் ஆகிய இடங்களிலுள்ளவை * மத்திய இமயமலைகள் என்றும், மேற்கு வங்காளம், சிக்கிம், பூடான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
* குமாயுன் பள்ளத்தாக்கு உத்திரப்பிரதேசத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு (பூமியின் சொர்க்கம்) ஜம்மு-காஷ்மீரிலும் அமைந்துள்ளன.
தீபகற்ப இந்திய மலைத்தொடர்கள்
* தீபகற்ப இந்தியாவில் மூன்று மலைத்தொடர்கள் உள்ளன. 1.விந்திய-சாத்பூரா மலைகள் 2. மேற்குத்தொடர்ச்சி மலைகள் 3. கிழக்குக்குன்றுகள் ஆகியன. இவற்றில் விந்திய சாத்பூரா மலைகள் ந்ரமதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு-கிழக்கான செல்லுகின்றன. இவை உண்மையில் நர்மதா பள்ளத்தாக்கின் பக்கச்சுவர்களே உண்மையில் மலைகளே அல்ல. இம்மலைகள் வாரணாசிக்கு அருகில் முடிவடைகின்றன.
* சாத்பூரா மலைகள் நர்மதைக்கும் தபதிக்கும் இடையே காணப்படுகின்றன. இம்மலைகளின் பாறைகள் தக்காண, லாலா பீடமூபூமி பாறை வகைகளைச் சார்ந்தவை. இவை வரலாற்று காலத்தில் ஏற்பட்ட மடிப்பு மவைகள் ஆகும்.
* சாத்பூரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்படும் சாத்பூரா மலைகள் மிகப் பழமையான மடிப்பு மலைகள்.
* இவ்வாறே தீபகற்ப இந்தியாவின் மேற்கில் மேற்கு கடற்கரைக்கு இணையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. தபதி நதியின் முகத்துவாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வடக்கு தெற்காவும் அமைந்துள்ளன.
* இத்தொடரில் மூன்று கணவாய்களும் உள்ளன. வடக்கில் தால்காட் போர்காட் கணவாய்களும், தெற்கில் பாலக்காட்டுக் கணவாயும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உயரமான சிகரங்கள் உள்ளன.
* குறிப்பாக, நீலகிரி மலைகள் தொட்டபெட்டாவும், ஆனைமலையில் ஆனைமுடியும் குறிப்பிடத்தக்கவை. பழனிமலை, கொடைக்கானல் மலை, குற்றால மலை ஆகியனவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தவை.
* கோடை வாழிடங்களான உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, ஆகியனவும் இம்மலைத் தொடரில் உள்ளன.
* கிழக்குக் குன்றுகள் கிழக்குக்  கடற்கரைச் சமவெளியை ஒட்டி அமைந்துள்ளன. தொடர்ச்சியற்ற பல குன்றுகளாகவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிச் செல்கின்றன.
* பின்னர் தென்மேற்காகச் சென்று நீலகரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகின்றன. இதில் திருப்பதி மலை, ஜவ்வாது மலை, கொல்லி மலை, பச்சைமலை ஆகியவை முக்கியமானவை. ஏற்காடு, ஏலகிரி ஆகியவை இம்மலைகளில் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.
வடக்கில் உள்ள சமவெளிப் பகுதிகள்
* இமயமலைகளின் அடிப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்தியாவின் வடபகுதி வரை சுமார் 7.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர் வரை சமவெளிகள் பரந்துள்ளன.
* பஞ்சாப் சமவெளி முதல் அல்லாம் பள்ளத்தாக்கு வரையில் இச்சமவெளி பரவியுள்ளது. சுமார் 3200 கிமீ நீளமும், 150 முதல் 300 கிமீ வரை அகலும் உடையது. வண்டல் படிவுகளால் ஆனது.
* இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளால் இப்பகுதி வளப்படுத்தப்படுகிறது. இச்சமவெளியின் உயர்நிலப் பகுதி பாங்கர் மண்ணால் ஆன வளம் மிக்க பகுதியாகும்.
* மேலும் இச்சமவெளியின் தாழ்நிலப்பகுதி காதர் மண்ணால் ஆனது.
* ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட, தோவாப் பகுதிகளில் உயரமான இடங்களில் பழமையான படிவு மண் காணப்படுகிறது. இதுவே பாங்கர் ஆகும்.
* எனினும் பாங்கர் நிலப்பகுதிகளில், சமச்சீரற்ற சுண்ணாம்புப்படிவுகள் உள்ளன. இவை கான்கர் எனப்படும்.
* பாங்கர் பகுதிகளைப் பொறுத்த வரை, உயரமான உடங்களில் அமைந்துள்ளதால், வெள்ளத்தினால் அரிக்கப்படாமல் உள்ளது.
* ஆற்றுப்பள்ளத்தாக்குளின் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மண் காதர் ஆகும். உத்திரப்பிரதேசத்தில் இம்மண் காதர் என்றும் பஞ்சாப் பகுதியில் இம்மண் பெட் என்றும் வழங்கப்படுகிறது.
* இம்மண் உள்ள இடங்கள் தாழ்நிலங்களாக உள்ளமையால், வெள்ளத்தினால் அரிப்புக்கு உட்படுகிறது.