Breaking News

கிரீன் டீ அருந்தினால் ஆபத்து எப்ப‍டி? – எச்ச‍ரிக்கை பதிவு



கிரீன் டீ அருந்தினால் ஆபத்து எப்ப‍டி? – எச்ச‍ரிக்கை பதிவு
இன்று க்ரீன் டீயை பலரும் விரும்பி குடித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிரீன் டீயை

எப்போது எப்ப‍டி அருந்தினால் ஆபத்து? எப்போது எப்ப‍டி அருந்தினால் நல்ல‍து என்பதை எவரும் அறிந்த்தாக தெரியவில்லை.
நாள் ஒன்றுக்கு மூன்று கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிக்க‍க் கூடாது. இந்த கிரீன் டீயை வெறும்வயிற்றில் அருந்தினா ல்,  அசிடிட்டியை உண்டாகும் ஆபத்து இருப்ப‍தை நீங்கள் நினைவில் கொள்ள‍ வேண்டும்.
தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அதா வது சேட்டிங் டைம் என்பார்களே அப்போது அருந்தலாம். . க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றிவிடும். வைட்ட மின்-சி, தாது உப்புகள் இருக்கும் இந்தக் டீயை கொதிக்க வைத்தால் அச்சத்துகள் வெளியேறும் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலைத் தூளையோ, பையையோ(டீ பேக்)போட்டு, மூடிவைத்து , சாறு இறங்கியதும் பருகலாம். வைட்டமின்-சி வேண் டுகிறவர்கள், அதனுடன் சிறிதளவு எலுமிச்சைசேர்த்து ம் பருகலாம்.
மொத்தத்தில், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளி கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர் களுக்கான நல்ல பரிந்துரை, க்ரீன் டீ. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட க்கூடிய தாகத்தை குறைக்கும் வல்லமை படைத்தது!’’