இதனால் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முறைகேட்டை தட்டிக் கேட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சக்திவேலை, கல்வித்துறை அலுவலக எழுத்தர் கலைமணி திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை, ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
தொடக்கக்கல்வி அலுவலர் அப்துல் ரஹீமிடம், எழுத்தர் கலைமணி குறித்து புகார் மனு அளித்தனர். ஆனால், அதை அவர் வாங்க மறுத்தார். இதனால் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இடமாறுதல் கலந்தாய்விற்கான காலியிடங்கள் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வை நடத்துவோம் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கலந்தாய்வு வெறும் கண்துடைப்பாக நடக்கிறது. காலியிடங்களுக்கு ஏற்கனவே லஞ்சம் வாங்கிக் கொண்டு, பணியிடங்களை மறைக்கின்றனர். இந்த கலந்தாய்வை ரத்து செய்து, முறையாக நடத்த வேண்டும்,’’ என்றனர்.