இது தொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்குச் சென்று ஆகஸ்ட் 17 முதல் 26 வரை இணைய வழி மூலமாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடித் தனித் தேர்வர்கள், பிற பாடத்திட்ட தனித் தேர்வர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. எனவே, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்போது எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகளிலும், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.