பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள்
படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ளலாம். பிளஸ் 2
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு
செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப
அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று
வழங்கப்படும் நாளில் எடுத்து வரவேண்டும்.
10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு
செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவெண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 15 முதல் ஜூலை 29 வரை
வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.