Breaking News

கிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம்

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய போட்டித்தேர்வுகளில் பங்கேற்க செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.'உயர்கல்விக்கான தேசிய போட்டித் தேர்வுகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு இல்லை' என ஆய்வில் தெரிந்துள்ளது.

இதனால் கிராமங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்- 2 மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர். எம்.எஸ்.ஏ.,) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்விக்காக தேசிய அளவில் நடக்கும் தேர்வுகள், கல்வி உதவித் தொகை, தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கான மாணவர்கள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது.