பிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரை நீக்கப்பட்ட
புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள்
முதல் இடைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.கடந்த 2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1,
பிளஸ் 2 பாடப்புத்தகம் 2008ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டன.
ஆனால் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொருளியல்
புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜூலை 24ல் இடைத்தேர்வு
துவங்குவதாக கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் எவ்வாறு தேர்வு எழுதுவது
என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது:
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 15ல் வகுப்புகள்
துவங்கின. தற்போது வரை அவர்களுக்கு முகவுரை நீக்கப்பட்ட பொருளியல்
புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஜூலை 24ல் இடைத்தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வாறு அத்தேர்வை எழுதுவர். கல்வி
அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.