அரசுப்பள்ளி-மாணவி மற்றும் ஆசிரியை….மெக்சிகோ பயணம்
அவர்களின் பயணம் நமது கையில்:
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 9 மாதங்களாக பரவலாக எல்லோராலும் பாராட்டப்பட்டு வருவதும்,அதற்கான காரணமும்…. நமது ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு நன்கு தெரியும்.
தெரியாதவருக்கு…….
கடந்த வருடம் ஜூலை மாதம், நமது மாநில SSA(அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்ககம்) மூலம் PBL(Project Based Learning) என்ற பயிற்சி தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியப் பயிற்றுனர் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
அவரவர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து அதைத் தீர்க்கும் வகையில் செயல்திட்டம் ஒன்று செய்து ஆவணப்படுத்தி ஆகஸ்ட் மாதம் இறுதி / செப்டம்பர் முதல் வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் , என்பது குறிப்பு.
பிரச்சனைகளைக் கண்டறிதல்-தீர்வுக்கான செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களது யோசனைகளாக இருக்க வேண்டும்,வழிகாட்டுதல் மட்டுமே ஆசிரியரது பணியாக இருத்தல் அவசியம்.
இதில் மாணவர்கள்-பெற்றோர்கள்-சமூகம் இவற்றின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது, இவை போட்டியின் வரையரைகள்..தமிழகம் முழுவதுமிருந்து 1400 க்கும் அதிகமான செயல்திட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன..
முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்திய நாட்டளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட 100 சிறந்த செயல்திட்டங்களில் தமிழக அரசுப்பள்ளிகளே 31 செயல்திட்டங்களில் தேர்வாகி இருந்தன.
மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கினர் இக்குழந்தைகள்.
இவர்கள் அனைவருக்கும் போட்டி நடத்தும் நிறுவனம்,பரிசளிப்பு விழாவிற்கு வழிகாட்டி ஆசிரியர் மற்றும் செயல்திட்டம் செய்த மாணவர்/மாணவி ஒருவருக்கு ரயிலில் 2ஆம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதற்கான பணமும் அளித்து , குஜராத் மாநிலத் தலைநகரான அகமதாபாத்திற்கு வரவழைத்து கௌரவப்படுத்தியது.
மேலும்,விழா மேடையில் தேர்வுசெய்யப்பட்ட 100 செயல்திட்டங்களிலிருந்து சிறந்தவைகளாக 20 செயல்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.அவற்றிலும் நம் தமிழக மாணவர்களது செயல்திட்டங்கள் 8 தேர்வுசெய்யப்பட்டன. மீண்டும் TOP 5 –இல் நமது தமிழக மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு மிகப்பெரும் நன்மதிப்பைப் பெற்றனர்..
அவர்களில் ஒருவரே.. கரூர் மாவட்ட ஆச்சிமங்கல நடுநிலைப் பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் சசிரேகா …
தங்களது ECO WALL என்ற செயல்திட்டத்தை இந்திய அளவில் முதன்மையாக வெற்றி காணச் செய்ததோடு ரூபாய் 50,000 பணத்தை பள்ளிக்கு விருதாகப் பெற்றுத் தந்தனர்..
அதோடு மட்டுமன்றி வருகின்ற செப்டம்பர் மாதம் மெக்ஸிகோவில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கிற்கு இந்தியாவில் விலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே பள்ளியும் இதுதான்.
ஆகவே ஆசிரியை சசிரேகாவும் அவரது மாணவரும் மெக்ஸிகோ சென்று வர ஆகும் பயணச் செலவு மட்டுமே 2 லட்சங்கள்..
அவர்களுக்கு உதவி செய்தால் மட்டுமே அவர்களால் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்த முடியும்.
நம் அரசுப் பள்ளிகளின் பெருமைகளைப் பார்போற்ற பறைசாற்றிவர இவ்விருவரையும் நம் கருணை மனதால் வழி அனுப்பி வைக்க நம்மால் முடிந்த உதவிகளை பணமாகத் தருவோம்…
உங்களால் எவ்வளவு பணம் தர முடிந்தாலும் கொடுங்கள்…..100 ரூபாய் மட்டுமே கொடுக்க முடிந்தாலும் பரவாயில்லை….
please help them…
Acc NO: 20273312408 Name: JANANI-DFC AMBASSADOR
உங்கள் உதவிகளை மேற்கண்ட இந்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைக்க நட்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு..
S..உமாமகேஸ்வரி
(PBL-State Coordinator)
Teacher-GHSS-Nallampatty
ERODE DIST. மேலும் சு.அமுதன், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி., கரூர் மாவட்டம்.