உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர்
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு
வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு
வாரியம் 1006 நபர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும்
கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்ய தெரிவு
செய்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல்
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
தெரிவு செய்யப்பட்ட 1006 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும்
அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா இன்று 5 நபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணி
நியமன ஆணைகளை வழங்கினார்.