பள்ளிக்கல்வித் துறையின் மூன்று ஆண்டுகள் பணியிடம் மாறுதல் தடை ஏன்?,,,
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவா?
அப்படியானால் மாணவர்களின் நலனில் இதுவரை அக்கறை காட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறதோ? பள்ளிக்கல்வித்துறை.???
இதைப்பற்றி மலைவாழ் பெற்றோரிடம் கேட்டதற்கு
சார் இதெல்லாம் அரசியல் வாதிங்க காசு பிடுங்க பன்றது சார் ஆமா சார் எங்க
மலைக்கு வர்ற வாத்திமாருங்க ஒரே வரிசத்தில்ல ஓடிருராங்க. அடுத்த வாத்தியார்
வற ரெண்டு வருசம் ஆகும் ஏதோ டெபுடேசன் போட்டு ஓட்டுறாங்க எல்லாம் காசு
வாங்கதான் சார் என்றார் ... இதில் இருக்கும் உண்மையை புறிந்து கொள்ளுங்கள்
..
ஒருவர் ஒரு இடத்தில் இருந்து பணிமாறுதல் பெற்றுவிட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்துவிடுவார் தானே.,
இல்லை பல மாதங்கள் ஆகுமா?? பல மாதங்கள் ஆகும் என்றால் ஆசிரியர் பற்றாக்குறை
என்றுதானே அர்த்தம்.,அப்படி இருக்கையில் ஏன் பணி நிரவல்?? சரி பணிநிரவல்
செய்தால்தானே காலியிடம் இருக்கிறதா என்று கண்டறிய முடியும் ..
தற்போது புதியதாக அசிரியர் பணி நியமனமும் இல்லை?? பணிமாறுதல் பெற தடை வேறு விதிக்கப் பட்டுள்ளது.. உண்மை தானே
தற்போது பணிநிரவல் நடைபெற்று மீண்டும் காலிப்பணியிடம் இருந்தால் கல்வித்துறை என்ன செய்யும்?
இந்த தடையால் எதை மாற்ற நினைக்கிறது கல்வித்துறை. மறைக்கிறது என்றே பலரின் கருத்து.,
ஆம் அரசியல்வாதிங்க கையில் லஞ்சத்தால் சிக்கித் தவிக்கிறது கல்வித் துறை என்கிறார்கள் மக்கள்
சொந்த மாவட்டத்தில் பணிமாறுதல் என்றால் ரூ300000. தென் மாவட்டத்திற்கு 5முதல்6 லட்சம் என தரநிர்ணயம் செய்து ஏலம் விடுகிறார்கள்..
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் வருகின்ற எலக்சனுக்கு கலெக்சன்
நடைபெறுகிறது என்கின்றனர் பாதிப்படைந்தோர் ஆம் இந்த தடையால் சுமார் 50000
க்கும் மேலான அசிரியர்கள் பணிமாறுதலில் கலந்து கொள்ள முடியாது ,. அதனால்
அரசியல் வாதிங்களுக்கு பணம் கொடுப்போர் பணிமாறுதல் அற்புதமாக பெறுவர்,,.
தடை ஏன் விளக்கம் தருமா அரசு???
பணிமாறுதல் நேர்மையான முறையில்தான் நடக்கிறது என்றால்??
ஏன் துறை மாறுதல் தர வேண்டும்? ??
பகிரங்கமாக ஒவ்வோர் பள்ளியிலும் இருக்கும் காலிப்பணியிடத்தை ஏன் நெட்டில் வெளியிட மறுக்கிறது அரசு
காலிப்பணியிடம் உள்ள பள்ளியை ஏன் மறைக்க வேண்டும்?? இவ்வாறு பல
சந்தேகங்களையும் சச்சரவுகளையும் கிளப்புகிறது கல்வித்துறையின் நடவடிக்கை..
மேலும் பணிபுரியும் ஆசிரியரின் பெற்றோர் கூறுகையில்
சார் எனது மகள் வேறு மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார் இன்னும்
திருமணம் ஆகவில்லை தொலை தூரத்தில் பணியிலிருப்பதால் மாப்பிள்ளை மணம்
முடிக்க வர தயக்கம் காட்டுகின்றனர் கவுன்சிலிங் நடந்தாலாவது ஓர் மாற்றம்
கிடைத்து வந்து விடுவாள் என நம்பினோம் ஆனால் இந்த தடையால் என் மகள் முதிர்
கன்னியாகவே மாறிவிடுவாள் போல. எனக் கூறிவிட்டு ஆட்சிமாற்றம் வேண்டும்
என்றார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த தவறான முடிவால் தமிழக அரசின் மீது
மக்களும் பாதிப்படைந்த ஆசிரியர்களும் அதிர்ப்தியில் உள்ளனர்