Breaking News

'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.

முதற்கட்டமாக தமிழ், ஆங்கில மொழிப்பாடங்கள்; வரும், 21ம் தேதி முதல், முக்கியப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பல புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், எந்த மாவட்ட விடைத்தாள்கள் எந்த மாவட்டத்துக்கு செல்கிறது என்பதை, ஆசிரியர்களே அறிய முடியும். இது, முறைகேடுகளுக்கு வழி வகுத்தது. மேலும், மாவட்ட தலைநகரில், ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் மட்டுமே அமைக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு, மாவட்ட தலைநகரம் உட்பட, இரண்டு அல்லது மூன்று மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்களுக்கு, பிற மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்கள் அனுப்பப்படுகின்றன.இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:ஆண்டுதோறும், அனைத்து மாவட்ட விடைத்தாள்களும் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டு மொத்தமாக கலக்கப்படும்.இதன்பின், விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள் கட்டுக்கள் மாவட்டவாரியாக அனுப்பப்படும். இந்த ஆண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் விடைத்தாள்கள் கலக்கப் பட்டு, பிற மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.இதனால், எந்த விடைத்தாள் யாருக்கு செல்கிறது என்பதை கண்டு பிடிக்கவோ, 'சேஸ்' செய்யவோ முடியாது.விடைத்தாள் திருத்தும் மையங்களில், வசதியுள்ள இடங்களில், கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். விடைத்தாளை திருத்தியதும், பக்க வாரியாக மதிப்பெண்ணை பட்டியலிட்டு, உடனடி யாக தேர்வுத்துறை இணைய தளத்தில், திருத்துனர்களே பதிந்து கொள்ள வேண்டும்.இப்பதிவுக்கும், விடைத் தாள் மதிப்பெண்ணுக் கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விடைத்தாள்களில் கறுப்பு, நீல நிற பேனா எழுத்துக்கள், பென்சில் அடிக்கோடுகள் தவிர, வேறு ஏதாவது வித்தியா சமான குறியீடுகள் இருந் தால், அந்த விடைத்தாளை குறித்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில், இரண்டு வித எழுத்துக்கள் இருந் தால், அதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மொத்தத்தில் முறைகேடுகள், தில்லுமுல்லுக்கு இடமின்றி, விடைத்தாள் திருத்தம் நியாயமாக மேற் கொள்ளும் வழிகாட்டுதல் கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன