கல்வித்துறையின் உயரதிகாரிகள், கடந்த, இரண்டு மாதங்களாக தேர்வு முன்னேற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டனர். அதனால், விரிவான திட்டங்களை உருவாக்கி அரசுக்கு தர முடியவில்லை.
மேலும், அரசிடமிருந்தும் துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர், சங்கங்களிடம் எந்த கருத்துகளையும் கேட்கவில்லை. அதனால் தான், இந்த பட்ஜெட் வழக்கமான சம்பிரதாய அறிக்கையாகி விட்டது' .பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட, புதிய அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
ஜாக்டோ, ஜாக்டா, ஜாக்கோட்டோ போன்ற அமைப்புகளின் போராட்டங்களையும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.