Breaking News

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்


மிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், அனைத்துஅரசுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப்பணியில் புதிதாக சேர்பவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 1.4.03 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் சேர்பவர்களுக்கென்று தனி எண் தரப்படும். ஒவ்வொரு மாதமும் கருவூலத்துக்கு அனுப்பும் சம்பள பட்டியலில் இந்த எண் குறிப்பிடப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கும், நம்பரை பெறாதவர்களுக்கும் வரும் மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதுவரை அவர்களது சம்பள பட்டியல் ஏற்கப்பட்டு ஊதியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு இந்த திட்டத்துக்கான தனி எண் உடனே வழங்கப்பட வேண்டும். இணைபவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கான தனியான எண்ணை உடனடியாக வழங்க வேண்டும். இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.