காஞ்சிபுரம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், உதவி கணினி, கணக்கு மேலாளர் மற்றும் கட்டிட பொறியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், உதவி கணினி மற்றும் கணக்கு மேலாளர், தரவு பதிவு இயக்குபவர், தட்டச்சர் மற்றும் கட்டிட பொறியாளர் ஆகிய பணி யிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படை யில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், உதவி கணினி, கணக்கு ஆகிய பணியிடத்துக்கு இளநிலை வணிகவியல் பட்டம் மற்றும் கணினி பொறியியல்(Tally) மற்றும் தட்டச்சு பிரிவில் தமிழ், ஆங்கிலம் உயர்நிலை முடித்திருக் கும் நபர்களும் தரவு பதிவு இயக்குபவர் பணியிடத்துக்கு தட் டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உயர்நிலை முடித்திருப்பவர்களும் கட்டிட பொறியாளர் பணியிடத் துக்கு கட்டடவியல் கல்வியில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப் பிக்கலாம். தகுதியுடைய நபர்கள் நபர்கள் வரும் 31-ம் தேதிக்குள் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பி.எஸ்.சீனிவாசன் நக ராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு விண் ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044-27222128 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். தகுதியான நபர்களை மாவட்ட ஆட் சியர் மூலம் அமைக்கப்பட்டுள்ள 6 நபர்கள் அடங்கிய குழு தேர்வு செய்யும். தேர்வு செய்யப்படும் நபர் களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.