Breaking News

உண்மையில் வேற்று கிரகவாசிகள் உள்ளனரா? புவிக்கு வந்தனரா?


                                                          

மத்திய அரசின் 6% அகவிலைப்படி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு !

As per sources, 6% enhancement in  D.A. payable to Central govt. employees and pensioners is likely to be declared in the coming week. A note in this regard is likely to be forwarded in the next cabinet meeting for approval. With this hike, central D.A. 


will be 113% with effect from 1st january 2015. As per practice, arrears from January to March 2015 will be paid in cash in the month of April.
As most of the state Govt.s follow central D.A. pattern, employees and pensioners of various state are also waiting for central D.A. approval.

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு நியமனம் இல்லை: அவமதிப்பு வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு கண்டிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில், 3,484 கிராம நிர்வாக அதிகாரி, காலி பணியிடங்களை நிரப்ப, 2010, டிசம்பரில் விளம்பரம் வெளியிட்டது. எழுத்துத் தேர்வு முடிந்து, 2011 ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், குறிப்பிட்ட சிலரை, காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், காலியாக உள்ள, 352 இடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க,
டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, ராமன் என்பவரை தவிர, மற்றவர்களை பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. சிலர் பணியில் சேர்ந்தனர்; சிலர் பணிக்கு வரவில்லை. இதையடுத்து, 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை' எனக் கூறி, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமாருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை, ராமன், தாக்கல் செய்தார். இவ்வழக்கு, நீதிபதி நாகமுத்து முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.ராமசாமி, டி.என்.பி.எஸ்.சி., செயலர் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் தேவேந்திரன் ஆஜராகினர்.

'தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு



பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

           பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச், 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளி யியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.

பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு

சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செய்திக் குறிப்பு: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், காலி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,746 முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான 'ஆன் - லைன் கவுன்சிலிங்', நேற்று முன்தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற, 1,746 பேருக்கு, அவர்களால் தேர்வு செய்யப்பட்ட காலியிடங்களில், பாடவாரியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழ் 265, ஆங்கிலம் 195, கணிதம் 220, இயற்பியல் 188, வேதியியல் 188, தாவரவியல் 92, விலங்கியல் 87, நுண்ணுயிரியல் 2, வரலாறு 196, பொருளியல் 173, வணிகவியல் 140 என, பாட வாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,789 பேர் தேர்வானதாக அறிவித்திருந்தது; ஆனால், 1,746 பேருக்கு மட்டும், 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நடந்துள்ளது. எனவே, மீதமுள்ள 43 பேருக்கு, 'கவுன்சிலிங்' உண்டா அல்லது 1,746 பேர்தான் தேர்வு செய்யப்பட்டார்களா என்ற குழப்பம் நிலவுகிறது.

ஈடுசெய் விடுப்பு விண்ணப்பம்

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்களால், தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல் அடைந்தனர்.பிளஸ் 2 தேர்வில், ஓரளவிற்கு, எதிர்பார்த்த, 'ரிசல்ட்' வந்து விடுகிறது. ஆனால், 10ம் வகுப்பு முடிவு, கல்வித்துறைக்கு திருப்தி அளிக்கவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்பதால், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விடுகின்றனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளி கல்வி இயக்குனர் தகவல்


தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அரக்கோணத்திற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-பள்ளிக்கல்வி துறை மூலம் தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு கட்டிட வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகம், நூலகம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்க 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் அவர்களது வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாணவிகள் அதிகமாக படிக்கும் 436 பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பறை வசதி செய்து கொடுக்க ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 நாளை( 31.3.15) கடைசி நாள்

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாளை கடைசி நாள் தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க: தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC)வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை நாள் : 1.03.2015 விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015. மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in இணைய தளத்தைப் பார்க்கவும்

கல்வி மானியக் கோரிக்கை நாளில் போராட்டம்- தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.


தொழிற்கல்விப் பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 
கல்வி மானியக் கோரிக்கைநடைபெறும் நாளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை ஏற்று, தொகுப்பூதியக் காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும், வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், 2007-ம் ஆண்டு முதல் காலியாக உள்ள 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தியும், பலமுறை முறையீடுகள் செய்தும் நடவடிக்கை இல்லை.எனவே, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் கல்வி மானியக் கோரிக்கை நடைபெறும்நாளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது,

இன்று ( 30.03.15)சென்னையில் நடந்த ஜாக்டோ கூட்டத்தில் முடிவு


சென்னையில் நடந்த ஜாக்டோ கூட்டத்தில் வரும் ஏப்ரல் 4 ந்தேதி மாவட்ட ஜாக்டோ கூட்டம் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவது என முடிவாற்றியது.

புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

கட்டண தாமதம் : 1ம் வகுப்பு சிறுமியை நாள்முழுதும் வெளியில் நிற்கவைத்த தனியார் பள்ளி

கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு மாணவியை, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக, தனியார் பள்ளி மீது புகார் எழுந்துள்ளது.



பெங்களூரு, கல்யாண் நகர் முதலாவது பிளாக் தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு மாணவி, பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தனர். கடந்த 18ம் தேதிக்கு முன், 10 நாட்கள் காய்ச்சலால் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், பள்ளி கட்டணம், 7,200 ரூபாயை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.


இதனையடுத்து, 2 வாரம் கால அவகாசம் அளித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியிழப்புச் செய்யப்படுவதாகவும், எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, லாவண்யா உள்ளிட்ட பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் பதிலளிக்குமாறு ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது


மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் நிலவும் விலைவாசிக்கேற்ப, இவர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன், 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும். இதன்படி, வரும் ஆகஸ்ட்டில், ஏழாவது சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை அளிக்க உள்ளது.

அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

ரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால் விடுமுறை வழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில் முரண்பாடு எழுந்துள்ளதால், தமிழக அரசு அரசாணை வழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொருளாளர் திரு.தே.அலெக்சாண்டர் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால் இயக்குனர் தேர்வு பணியில் இருப்பதால், அவரின் தனி செயலாளரிடம் இதுகுறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக இயக்குனரிடம் கலந்து பேசி நெறிமுறைகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

Annamalai university results december - 2015

annamalai university 2015 result click kere


DDE - Examination Results - December 2014

Enter Student Roll Number / Register Number  



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

மாற்றம் செய்ய வேண்டியதற்கான வழிமுறைகள்:-

1. பழைய பணியின் நியமன ஆணை
2. கணக்குத்தாள் நகல் 
3. மாறுதல் பெற்ற பணியின் DDO மூலம் கடிதம்.
குறிப்பு: DDO மூலம் அனுப்பும் கடிதத்தில் பழைய பணியில் பணிபுரிந்த DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும். அதேபோல் மாற்றம் செய்ய வேண்டிய DDO CODE மற்றும் EXTENSION(EXTN)ஐ குறிப்பிட வேண்டும்

இட பற்றாக்குறையால் திணறும் தனியார் பள்ளிகள்: அங்கீகாரத்தை ரத்து செய்து இழுத்து மூட திட்டம்

பள்ளிக்கல்வி விதிகளின்படி, இடமின்றி திணறும் தனியார் பள்ளி களின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில்,4,000 பள்ளிகளில், உரிய இட வசதி இல்லாமல், மாணவர்கள் மூச்சுத் திணறும் வகையில், சிறிய வகுப்புகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். கடந்த, 2004ல் கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில், 94 மாணவ, மாணவியர் உயிரிழந்தனர். பின், தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுக்க, மதுரை காமராஜர் பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் சிட்டிபாபு கமிட்டிக்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்கமிட்டியின் அறிக்கை படி, தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு தனியார் பள்ளியும் குறிப்பிட்ட உள்கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

நடுநிலை, உயர்நிலை பள்ளி விழாவுக்கு மத்திய அரசு நிதி; துவக்க பள்ளிகளுக்கு இல்லை

அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


           மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த, இக்கல்வியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்து, விழா நடக்கிறது. இதற்காக நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.2,350, உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.2,450 வழங்கியுள்ளது. இந்நிதியில் ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள்  நடத்தப்படுகின்றன.அதேசமயம் துவக்கப்பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சிறு குழந்தைகளை வேடிக்கை பார்க்க வைத்து விட்டு, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கியது பாரபட்சமே. வரும் காலங்களிலாவது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும், என்றார்

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்


வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 ஒன்று முதல் பத்து வரையிலான வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை -முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு- தகுதி காண் பருவம் -உண்மைநிலை விளக்கம்.

தொடக்க கல்வரித்துறை -  முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் ஒன்றியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட நாளினை கொண்டுதான் பட்டியலில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும். 

தகுதி காண் பருவம் முடித்த தேதியின் அடிப்படையில்  முன்னுரிமை  நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எந்த அரசாணையும் இல்லை.

மேலும் தொ.க. இ. செயல்முறை ந.க. எண்.36679/டி3/08 ல் TRB ஆசிரியர்களின் முன்னுரிமை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது தகுதி காண் பருவம் முடித்த தேதி என குறிப்பிடப்படவில்லை.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்


மிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், அனைத்துஅரசுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப்பணியில் புதிதாக சேர்பவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 1.4.03 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் சேர்பவர்களுக்கென்று தனி எண் தரப்படும். ஒவ்வொரு மாதமும் கருவூலத்துக்கு அனுப்பும் சம்பள பட்டியலில் இந்த எண் குறிப்பிடப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கும், நம்பரை பெறாதவர்களுக்கும் வரும் மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதுவரை அவர்களது சம்பள பட்டியல் ஏற்கப்பட்டு ஊதியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு இந்த திட்டத்துக்கான தனி எண் உடனே வழங்கப்பட வேண்டும். இணைபவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கான தனியான எண்ணை உடனடியாக வழங்க வேண்டும். இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வகுப்பு : பழங்குடியின மாணவர்களுக்கு அழைப்பு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க,பழங்குடியினர் பட்டதாரி மாணவ, மாணவியர், தங்களது பெயரைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, 
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பி.எட். முடித்து, கடந்தாண்டு மார்ச், 31ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பழங்குடியின பட்டதாரி மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசபயிற்சியில் பங்கேற்க வரும், 31ம் தேதி வரை, ஆசிரியர் பயிற்சி மையத்தில்வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.இதுதொடர்பாக மேலும் தகவல் தெரிந்து கொள்ள. புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் நிறுவன மொபைல்ஃபோன் எண், 73730-03385,73730-03386 தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் 

கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:கடந்த நான்கு ஆண்டுகளில், 182 புதிய தொடக்கப் பள்ளிகளை துவக்கியும்,

Nov14 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் இன்று(26.03.2014) ஆசிரியர்கள் ஆர்பாட்டம்:


தமிழகம் முழுவதும் இன்று முதுகலை ஆசிரியர்கள் 30000க்கும் அதிகமானவர்கள்   விடைத்தாள் திருத்தும் பணியினை காலை 1மணி நேரம் புறக்கணித்தனர்,இதில் தாள் 1க்கு ரூபாய் 20தரவேண்டும்.மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்தல் கூடாது உட்பட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பட்டதாரி முதுநிலை பட்டதாரி உட்பட அனைத்து சங்கங்களும் கலந்துகொண்டனர். 

ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு


சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,
6 முதல் 10 வகுப்பு வரை ரூ. 1.80 பைசாவும் வழங்குகின்றனர். பருப்பு சமைக்கும் நாட்களில் ரூ. 1.30, 1.40 என்று அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 3 கிராம் எண்ணெய் என்பதை 7 கிராமாக உயர்த்த வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் வழங்கப்படும் உருளைக்கிழங்கு ஒரு குழந்தைக்கு 16 பைசா அனுமதிக்கப்படுகிறது. 100 குழந்தைகளுக்கு ரூ. 16 வழங்கப்படுகிறது. அப்படியென்றால்ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.8 க்கு வாங்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமில்லாதது. ஒரு மாணவனுக்கு 60 பைசா உயர்த்த வேண்டும். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், மறியல், அமைச்சர் சந்திப்பு என எல்லாம் செய்து பார்த்தும் பலனில்லை. ஏப்ரல் 4 ல் சென்னையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. அதன் பிறகு ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்

எஸ்.எஸ்.எல்.சி.ஆங்கிலம் முதல் தாளில்3 கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன மாணவிகள் கருத்து



மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த 19-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. நேற்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்று பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் கூறியதாவது:-

ஆங்கிலம் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் பல, ஏற்கனவே கடந்த வருடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளே ஆகும். இந்த கேள்விகளை கொண்டு எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். அதனால் எளிதாக இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் 19, 21, 22 ஆகிய 3 கேள்விகள் புத்தகத்தில் இல்லை. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன. அந்த 3 கேள்விகளும் தலா 1 மதிப்பெண்ணுக்கு உரியது.

மேலும் 40-வது கேள்வி புத்தகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல வினாத்தாளில் முதல் பக்கத்தில், ஒரே சொல்லுக்கு இணையான (சினானிம்ஸ்) சொல் கேட்டு ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.

விடைத்தாள் திருத்தும் பணி: இன்று ஒரு மணி நேரம் புறக்கணிப்பு


தஞ்சாவூர்: 'தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, அறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரி, இன்று, ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிக்கப்படும்' என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், தஞ்சை மாவட்ட தலைவர் ஜோதிமணி தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, தேர்வறை கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தேர்வுத் துறை இயக்குனரகத்தின் இந்த உத்தரவு, தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள,

பரிசு என்ற பேரில் 30 ரூபாய்க்கு காசோலை


சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி-கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?


பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி வி.ரீனா சார்பில் அவரது தந்தை என்.வீரண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் ரீனாநிகழ் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 (உயிரியல் - கணிதப் பாடப்பிரிவு) படிக்கிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.மாநிலம் முழுவதும் கடந்த 18-ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. அதில் எனது மகளும் பங்கேற்றார். இந்த நிலையில், ஒசூரில் கணிதத் தேர்வு வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகைப்படம் எடுத்து பலருக்கு அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என கடந்த 22-ஆம் தேதி செய்தி வெளியானது.

பட்ஜெட்டை எதிர்பார்த்த ஆசிரியர்கள் - ஏமாற்றத்தை கொடுத்த கல்வித்துறை

கல்வித்துறையின் உயரதிகாரிகள், கடந்த, இரண்டு மாதங்களாக தேர்வு முன்னேற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டனர். அதனால், விரிவான திட்டங்களை உருவாக்கி அரசுக்கு தர முடியவில்லை. 

மேலும், அரசிடமிருந்தும் துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர், சங்கங்களிடம் எந்த கருத்துகளையும் கேட்கவில்லை. அதனால் தான், இந்த பட்ஜெட் வழக்கமான சம்பிரதாய அறிக்கையாகி விட்டது' .பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட, புதிய அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

 
ஜாக்டோ, ஜாக்டா, ஜாக்கோட்டோ போன்ற அமைப்புகளின் போராட்டங்களையும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.


வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால்,ஆசிரியர் கலந்தாய்வு தள்ளி போகுமா?


வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலை

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், 1,789 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில், தேர்வானவர்களுக்கு பணி வழங்குவதற்கான, இணையம் மூலமான கலந்தாய்வு (ஆன்-லைன் கவுன்சிலிங்), வரும் 28ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், 28ம் தேதி, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் சார்பில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியுமா என, அச்சமடைந்துள்ளனர். எனவே, கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது-விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு:


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல், வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண் 29245/2014. 30ந்தேதி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த ஆண்டிற்கான TET அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.கூடுதல் பணியிடங்களை பற்றிய தகவல் இன்று நிதிநிலை அறிக்கையில் தெரியவரும். நண்பர்களே படிக்க தொடங்குங்கள்.ஆகஸ்டில் நிச்சயம் தகுதித்தேர்வு உண்டு.தொடர்ந்து படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

தமிழக பட்ஜெட் : பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி


தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி, வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்துபேசிய அவர் வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.21,116 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை:


பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன.

முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில் துவங்கியது.முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் கட்டுக் காப்பு மைய பொறுப்பாளர்கள், விடைத்தாள்களை சரிபார்த்தனர். பின், 18ம் தேதி முதல், தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. சென்னையில், நான்கு மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 73 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.இதில், மொழிப் பாடங்களுக்கு பல மையங்களில் திருத்தும் பணி முடிந்து விட்டது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், உதவி கணினி, கணக்கு மேலாளர் மற்றும் கட்டிட பொறியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்கள் தேர்வு -விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது



காஞ்சிபுரம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், உதவி கணினி, கணக்கு மேலாளர் மற்றும் கட்டிட பொறியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், உதவி கணினி மற்றும் கணக்கு மேலாளர், தரவு பதிவு இயக்குபவர், தட்டச்சர் மற்றும் கட்டிட பொறியாளர் ஆகிய பணி யிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படை யில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், உதவி கணினி, கணக்கு ஆகிய பணியிடத்துக்கு இளநிலை வணிகவியல் பட்டம் மற்றும் கணினி பொறியியல்(Tally) மற்றும் தட்டச்சு பிரிவில் தமிழ், ஆங்கிலம் உயர்நிலை முடித்திருக் கும் நபர்களும் தரவு பதிவு இயக்குபவர் பணியிடத்துக்கு தட் டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உயர்நிலை முடித்திருப்பவர்களும் கட்டிட பொறியாளர் பணியிடத் துக்கு கட்டடவியல் கல்வியில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப் பிக்கலாம். தகுதியுடைய நபர்கள் நபர்கள் வரும் 31-ம் தேதிக்குள் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பி.எஸ்.சீனிவாசன் நக ராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு விண் ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044-27222128 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். தகுதியான நபர்களை மாவட்ட ஆட் சியர் மூலம் அமைக்கப்பட்டுள்ள 6 நபர்கள் அடங்கிய குழு தேர்வு செய்யும். தேர்வு செய்யப்படும் நபர் களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு


தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
பார்வையற்றோரை குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என அரசு பதில் அளித்துள்ளது. 

பார்வையற்றோரையும் சாதாரண மனிதர்களாக பார்க்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பார்வையற்றோரை நியமிக்காதது ஏன்? இது குறித்து சபீதா விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி சபீதா நேரில் ஆஜராகவும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதுச்சேரியில் இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .


புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி, இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களே ஆசிரியராக முடியும். 
ஒன்றாம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை, தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் வகுத்துள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் இல்லை. எனவே, தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களின் கல்வி வாரியத்தின் கீழ் ஆசிரியர் கல்வி படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதி வந்தனர். 

கல்வித்தகுதி தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்ட ஓவிய ஆசிரியர் போட்டித் தேர்வு

தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய ஆசிரியர்களாக உள்ளனர்.

இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை.

ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும்.

வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கும் தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு:


பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்படட தேர்வறை கண்காணிப்பாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, வியாழக்கிழமை (மார்ச் 26) ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது:


தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை (மார்ச் 25) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் வரும் நிதியாண்டுக்கான (2015-16) நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வரவுகள் அதிகரித்தாலும், செலவுகளும் மிகையளவு கூடும் என நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நிகழ் நிதியாண்டைக் காட்டிலும் வரும் நிதியாண்டில் (2015-16) வருவாய் வரவுகள் ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தாலும் செலவுகளின் அளவு அதற்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் வருவாய் வரவுகள், ரூ.1.27 லட்சம் கோடிக்கு அதிகமாக இருந்தாலும், செலவுகளின் அளவு அதை விடக் குறைவாக இருந்ததால், வருவாயில் உபரி ஏற்பட்டது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வருகிற 25-ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

தேர்வு பணியில் இருந்து விடுவித்து கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி


வாட்ஸ் அப் விவகாரத்தினால் கல்வித்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன. தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை இடம் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி கொண்டு தனியார் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமற்ற பங்குதாரராக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயாராகி வருகிறது.
தேர்வு பணியில் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கல்வி மற்றும் தேர்வு துறை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக கிருஷ்ணகிரியை சேர்ந்த மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வாட்ஸ் அப் விவகாரத்தால் சஸ்பெண்டு ஆன ஓசூர் மாவட்ட கல்வி அதிகாரி வேதகன்

100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களின் வாழ்க்கையை வீணாக்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்ட, 6 மாணவர்களை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழபெரும்பள்ளத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 42 மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தனர். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய அரசு பொது தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர். அப்போது சாந்தி, கனிதா, காயத்ரி, ரேணுகா, தமிழ்ச்செல்வி மற்றும் மாணவர் சுபாஷ் ஆகிய 6 பேரை பள்ளி தலைமை ஆசிரியை பட்டு ஷீலா அற்புதராணி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் தலைமை ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, "இப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி காண்பிக்க வேண்டுமென்றே 6 மாணவர்களை தேர்வு எழுதி அனுமதிக்கவில்லை. இம்மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். தேர்வு அன்று வழங்குவார்கள் என்று மாணவர்கள் பரீட்சை எழுத சென்றனர். ஆனால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் வேண்டும் என்று அனுப்பி விட்டனர்" என்றனர்.

புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு