Breaking News

என்.எல்.சி., நிறுவனத்தில் வேலை



நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எல்.சி.,) நிறுவனத்தில், உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், சிவில், கன்ட்ரோல் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், மைனிங் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.
வயது வரம்பு: டிசம்பர் 1, 2015 தேதி நிலவரப்படி 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப பொறியியல் துறை பாடப் பிரிவில், 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நடைபெறவிருக்கும் கேட்-2016 தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 22, 2016
மேலும் விவரங்களுக்கு: www.nlcindia.com