Breaking News

தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் உதவி பெற, தகுதித் தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.


இத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு இறுதி தேர்வில் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று, 50 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.,24க்குள் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.