Breaking News

அரசு உதவிபெறும் பள்ளிகளில் திடீர் ஆய்வு


அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் போதிய மாணவர்கள் உள்ளனரா தேவையான ஆசிரியர் பணியிடங்கள் உள்ளனவா அல்லது கூடுதலான ஆசிரியர்களை நியமித்துள்ளார்களா என ஆய்வு செய்யும் பணி நேற்று துவங்கியது.


கூடுதல் ஆசிரியர்கள் பணியில் இருந்தால் அவர்கள் வேறு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதற்காக ஒன்றியத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களை வரவழைத்து பேசிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்தர்சீலா திடீர் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். ஏ.இ.ஓ.,க்கள் தங்களது ஒன்றியத்தை விட்டு மற்றொரு ஒன்றியத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.