Breaking News

இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான்- தமிழக அரசு அரசாணை


தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உட்பட 10 மாநகராட்சி மேயர்களும், வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கடந்த, 10ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 157ல், இனி மாநகராட்சிமேயர்களை, 'வணக்கத்திற்குரிய' என்று அழைக்காமல், 'மாண்புமிகு மேயர்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இந்த அரசாணை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்