Breaking News

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது பி.இ.எல்., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. இது எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரசித்தி பெற்ற நிறுவனம். 1954ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் முதலில் நமது நாட்டின் ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் வகையிலான ரேடார், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், வெப்பன் சிஸ்டம்ஸ், ஹோம் செக்யூரிட்டி
போன்றவற்றிற்காகவே நிறுவப்பட்டது. பின் நாட்களில் இதன் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டு தற்சமயம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 90 இன்ஜினியரிங் பணியிடங்களை கான்ட்ராக்ட் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பிரிவுகள்: இந்த இன்ஜினியரிங் பணியிடங்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் உள்ளன.

வயது: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக தொடர்புடைய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். முதலில் முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.