Breaking News

பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு


புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும்.


கடும் நடவடிக்கை :


மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத் தவிர, பள்ளியின் மற்ற நிர்வாகப் பணிகளுக்கு ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது.இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது