Breaking News

ஆசிரியர்களுக்கான தகுதி காண் (weitage mark) முறையை ரத்து செய்யக் கோரிக்கை:


தமிழகஅரசு நீட் (NEET) தேர்வினால் ஏழைகள் & கிராமத்தினர்
பாதிக்கபடுகிறார்கள் என்று ரத்து செய்தது.

அதேபோல் TET தேர்விலும்
தகுதிகாண் முறையினால்
பெருமளவில் தமிழக மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களின் நிலை????


 * அன்று அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியரின் பற்றாகுறை.    
*அப்பொழுது  சாப்பாட்டிற்கு கூட வழிஇல்லைட்யூசன் சென்றும்படிக்க முடியாதநிலை.
*செய்முறை மதிப்பெண்கள் மிக குறைவு.
*அன்று காலை மாலை வகுப்புகளும் இல்லை.
*90% அரசு பள்ளிகளில் 10,12ம் வகுப்புமாணவர்களின் முதல்மதிப்பெண்கள்  350, 750 மட்டுமேஇம்மதிப்பெணணுக்கும் கீழ்உள்ளவர்களின் நிலையை எண்ணிபாருங்கள்.
*அன்று தேர்வு எழுதும் போதும் வினாத்தாள் படிப்பதற்கும் நேரம்ஒதுக்கப்படவில்லை.
*நகரங்களில் சென்று படிக்கவும் போதிய வசதி இல்லை.
*பெருமளவு பெற்றோர் படிக்கவில்லை வீட்டுப்பாடம் செய்யஇயலாதநிலை.
நோட்டுப்புத்தகம் கூட வாங்க முடியாத நிலை.
*கிராமப்புற மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குசென்று சிறுகசேமித்த அப்பணத்தின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி்,கல்வி பயின்றுள்ளனர்.
*முக்கியமாக ஒன்று  'இன்று பள்ளிக்கு படிக்க செல்கிறார்கள்ஆனால்அன்று நாங்கள் பட்டினி என்னும் பசிப்பிணியை போக்கபள்ளிக்குசென்றோம்.

*இன்று இருக்கும் சமச்சீர் கல்வியும் அன்று இல்லை.

*இன்னும் கொடுமை என்னவெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்தபாடங்கள் இப்போது இல்லைநாங்கள் TET தேர்விற்கு எல்லாமேபுதியதாக படிக்க வேண்டிய கட்டாயநிலை.

*ஆனால் தற்போது சமச்சீர் படித்திருப்பவர்களுக்கு இதுவும்சாதகமாகவே அமைந்துள்ளது.
*இப்போது படிப்பவர்களுக்கு TET ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் !ஆனால் அப்போது .......?

*இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் மட்டுமேபெரும்பாதிப்படைவர்.
பள்ளித்தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றனஎன்று  TET தேர்வைகொண்டு வந்த அரசுமீண்டும் பள்ளி மதிப்பெண்களை கணக்கில்கொள்வது எந்த விதத்தில் ஞாயம் ஆகும்.

*மாவட்ட தேர்ச்சி விகிதத்திற்காக,   தேர்வு எழுதும் மாணவர்களுக்குவிடைகள் சொல்லி கொடுப்பதும் தற்போது நடைமுறைக்குவந்துள்ளதாக மாணவர்களே கூறுவது அதிர்ச்சியல்ல அனைவருக்கும்தெரிந்த அவளநிலை.
இப்படிபட்ட நிலை அன்று இல்லை.

தகுதிகாண் நடத்துவதன் மூலம் நாங்கள் TET தேர்வில் 150 க்கு100மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை,
 *ஆனால் தற்போது படிக்கும் மாணவர்கள் தகுதிகாண் மூலம் TETதேர்வில் 90 விட குறைவான மதிப்பெண்கள் மட்டும் எடுத்துசுலபமாகதகுதி பெற்று விடுகிறார்கள்.

*அன்று பல கடினமான சூழ்நிலைகளில் கல்வி கற்றனர்.

*தற்போது எல்லாேமே மாறிவிட்டன.
 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்ததமிழகஅரசு பல்வேறுமுயற்சிகளை எடுத்துவருகின்றது.
தமிழகஅரசின் பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் அதிகமதிப்பெண்கள் பெற பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.


*பனிரெண்டாம் வகுப்பில்  மதிப்பெண்கள்
90% :
அன்று 650/1200  கீழ்முதல் மதிப்பெண் 750.
இன்று 1000/1200 , முதல் மதிப்பெண்1199.

*தகுதி காண் மதிப்பெண்களை கொண்டுவந்த கல்வியாளர்களைதயவாய் கேட்டுக்கொள்வதுஇதன் மூலம்  பல ஆயிரகணக்கானகுடும்பங்கள் மற்றும் சந்ததிகள் சமூகத்தில் மேலே எழமுடியாமல்பாதிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

*ஏழைகளை நினைத்துப்பாருங்கள்.

மேற்கூரிய அனைத்தையும்
கருத்தில் கொண்டு  தமிழகஅரசு தகுதிகாண் முறையை ரத்து செய்யவேண்டும்.

*தகுதிகாண் முறை குறித்து ஆலோசனை  நடைபெறுகிறது என்றுமகிழ்ச்சி அடைகிறோம்.

*எங்கள் வாழ்வு தமிழக அரசு கையில்


*ஏழைகள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உடனடிநடவடிக்கைஎடுக்குமாறு  மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.