Breaking News

இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் :


பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய
ஜெயக்குமார்,

வருவாய் வரவுகள் - 1,59,363 கோடி அளவிலும்வருவாய்செலவு 1,75,293கோடி என்ற அளவிலும்வருவாய்பற்றாக்குறை 15,930 கோடி என்ற அளவிலும் இருக்கும்.

2017 - 18ம் ஆண்டின் மொத்த நிதி பற்றாக்குறை ரூ.41,977கோடிமூலதன செலவுகள் ரூ.27,789 கோடியாகும்

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த வரும்நிதியாண்டில் ரூ.41,925 கோடி கடன் வாங்கதிட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள்ரூ.20,231 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாகஇருக்கும்.

2017 - 18ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை கடந்தஆண்டின் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயல தற்போது 1188 ஆகஇருக்கும் மாணவ சேர்க்கை இடங்கள் இனி 1362 ஆகஉயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

உயர்கல்வித் துறைக்கு ரூ.3,680 கோடி நிதி ஒதுக்கீடு.

அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.2,656 கோடி ஒதுக்கீடு.

உயர் கல்வி உதவித் தொகைக்கு 1,580 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.



*

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதிஒதுக்கீடு

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்காகநடப்பாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

ஊரக சாலை மேம்பாடு திட்டத்துக்கு ரூ.800 கோடி நிதிஒதுக்கீடு.

பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.758கோடி ஒதுக்கீடு.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

நகர்ப்புற மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.2,600 கோடி நிதிஒதுக்கீடு.

சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.400 கோடிநிதி ஒதுக்கீடு.

*

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதிஒதுக்கீடு

கல்லூரி விடுதி மாணவர் உணவுப்படி ரூ.875ல் இருந்து ரூ.1000ஆக உயர்வு.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் உதவித் தொகைரூ.20 ஆயிரம் ஆக உயர்வு.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.26,932 கோடிசுகாதாரத்துறைக்கு ரூ.10,518 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.497 கோடி.

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடிதுறைமுகம்.



*

உள்நாட்டுவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கநடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் கிராமப்புற கோயில்களை புதுப்பிக்ககோயில் ஒன்றுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.

புதுப்பிக்கப்படும் கோயில்களின் எண்ணிக்கை 500ல் இருந்து1000 ஆக உயர்வு.

கல்லூரிபல்கலைக்கழகங்களில் 200 ஆவின் பாலகங்கள்நிறுவப்படும்.

*

நெடுஞ்சாலைத் துறைக்கு 115 கி.மீதூர மாநிலநெடுஞ்சாலைகளும், 107 கி.மீநீளமுள்ள மாவட்ட சாலைகள்ரூ.160 கோடி செலவிலும் அகலப்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 1000கி.மீதூரத்துக்கு சாலை அகலப்படுத்தப்படும்இதற்கு 3,100கோடி நிதி ஒதுக்கீடு.

சாலைப் பாதுகாப்புக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

*

சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர்குழு ஏற்படுத்தப்படும்.

காங்கேயம்பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசுநிதி உதவி வழங்கும்.

நீர்நிலைகளை குடிமக்களின் ஒருங்கிணைப்போடு தூர்வாரும்மராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும்.

ஆவின் நிறுவனத்தின் சராசரி உற்பத்தி 2016ம் ஆண்டில் 40.22லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

ரூ.40 கோடி செலவில் மதுரையில் பால் பதப்படுத்தும்தொழிற்சாலை அமைக்கப்படும்இங்கு நறுமண பால்தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

நீர்வள நிலவள திட்டம் ரூ.3,042 கோடியில்செயல்படுத்தப்படும்.

*

25 கால்நடை கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாகமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்கால்நடை மருந்தகங்கள்கால்நடை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த நடவடிக்கைஎடுக்கப்படும். 25 புதிய கால்நடை கிளை மையங்களையும் அரசுஅமைக்கும்.

ஆவின் நிறுவனத்தின் சராசரி உற்பத்தி 2016ம் ஆண்டில் 40.22லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

ரூ.40 கோடி செலவில் மதுரையில் பால் பதப்படுத்தும்தொழிற்சாலை அமைக்கப்படும்இங்கு நறுமண பால்தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.



ஏழைப் பெண்களக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் ஆடுகளும் வழங்கப்படும்.

ஊரக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.469 கோடிஒதுக்ககீடு.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறுந்தொழில்நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை.

*

பால்வளத்துறைக்கு ரூ.130 கோடியும்மீன்வளத்துறைக்குரூ.768 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது.

கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.497 கோடி
ஒதுக்கீடு.

சுற்றுச்சூழல் வனத்துறைக்கு ரூ.587 கோடி ஒதுக்கீடு.

கூடுதலாக 120 வட்டாரங்களில் புது வாழ்வு திட்டம்.

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதிஒதுக்கீடு.

நடப்பாண்டில் 39 லட்சம் ஏக்கர் பரப்பில் தோட்டக்கலைபயிர்களை சாகுபடி செய்ய நடவடிக்கை.

*

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் காலியாக உள்ள காவல்இளைஞர் பணியிடங்களுக்கு 10,500 பேர் தேர்வு செய்யப்படஉள்ளனர் என்று ஜெயக்குமார் அறிவித்தார்.

காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கூடுதலாக 3 ஆயிரம்வீடுகள் கட்டப்படும்.

நடப்பாண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 29காவல்நிலையங்கள்
காவல்துறை நவீனமயமாக்க ரூ.6,483 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வாகனங்களையும்தகவல் தொலைத் தொடர்புகருவிகளையும் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு.

குற்றவாளிகளை சீர்திருத்தும் அமைப்புகளாக திகழும்சிறைச்சாலைத் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு.

நிதி நிர்வாகத்தக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு.

நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.



நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.272.12 கோடிஒதுக்கீடு.

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க ரூ.150 கோடிஒதுக்கீடு.

கோவைமதுரைதிருச்சியில் இந்திய பன்னாட்டு திறன்பயிற்சிமையங்கள் திறக்கப்படும்.

கால்நடை பராமரிப்புக்காக ரூ.1,161 கோடி ஒதுக்கீடு.

அயல்நாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு திறன் பயிற்சிமையங்கள் உதவி புரியும்.

பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்க தமிழர் கலாசாரபாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.

***

சம்பளம்கல்விக்கான மானியமாக ரூ.46,331 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம்கடனாக வழங்கப்படும்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக சமச்சீர் நிதியம் உருவாக்கப்படும்.

மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கானசட்டத்தினை மாநில அரசே ஏற்கும்.

••••

நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930கோடியாக உள்ளதுதமிழக அரசின் கடன் சுமை மார்ச் மாதம்2018ம் ஆண்டில் 3,14,366 கோடியாக இருக்கும்நடப்புநிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாகஇருக்கும்.

நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் செலவு ரூ.1,59,363கோடியாகும்பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் எனகணிக்கப்பட்டுள்ளது.


பட்ஜெட் உரையை தாக்கல் செய்த ஜெயக்குமார்பட்ஜெட்தயாரிக்க உதவியவர்களுக்கு நன்றி கூறி உரையை நிறைவுசெய்தார்.