ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார்
அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும்புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம்பெறுபவர்கள் ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் ஜுன்மாதம் வரைகருவூலத்தில் நேரடியாக ஆஜராகி உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யவேண்டும். நேரில் வர இயலாதவர்கள் உயிர்வாழ் சான்று பெற்றுகருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இந்நிலையில், ஜீவன் பிரமான்வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்டகருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள்வழியாக இணையத்தளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார்அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழைப் பதிவு செய்யும் முறை இந்தஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படுகிறது.இதுவரை ஆதார்அட்டை, வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு)குடும்ப அடையாளஅட்டை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், இந்த ஆவணங்களின்நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய எண்ணை (பிபிஓ நம்பர்) குறிப்பிட்டுகருவூ லத்தில் சமர்ப்பிக்கவேண்டும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண்ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.