அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம்செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம்
செய்யக்கூடாது.
இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்யவேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே,மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான,ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோவிரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.