Breaking News

தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்.


தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளதுதமிழக சட்டசபையின் முதல்
கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது.


  அன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார்அதைத்தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரைநடைபெற்றது.

இதன் பிறகு .பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ததால் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார்புதிய அரசுமீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதிவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கைவாக்கெடுப்பில் வெற்றி பெற்றதுஇந்நிலையில் 2017-18 ஆம்ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல்செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட்தாக்கல் செய்ய உள்ளதுமேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றியஅதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிருநாளில் வெளியாகும்.