7வது ஊதியக் குழு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு அருண் ஜெட்லியிடம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.
புதுடில்லி: 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் ஏ,கே., மாத்தூர் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18, ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ 2. 25 லட்சம் வரை வழங்கவும், ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கவும், அடிப்படை சம்பளாக 16 சதவீதமாகவும், இதர படிகள் 63 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனை 24 சதவீதம் வரையில் உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் தனது அறிக்கையை அமல்படுத்தும் படியும்
தற்போது வழங்கப்பட்டு வரும் 52 வகையான படிகளையும் ரத்து செய்யும்படியும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது