Breaking News

ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 


இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு அக்டோபர் மாதமும் கடைசி யாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்தது.ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு (82 மதிப் பெண்) அளிக்கப்பட்டது. ஆசிரியர்தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.


இந்த விதிமுறையை சிபிஎஸ்இ சரியாக கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின்முதல் சி-டெட் தேர்வு பிப்ரவரியிலும், 2-வது தேர்வு கடந்த செப்டம்பரிலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இத னால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும்பி.எட். பட்டதாரி களும் பணியில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக் கப்பட்டதையும், வெயிட்டேஜ் மதிப் பெண் முறையில் (பிளஸ்-2, ஆசிரி யர் பயிற்சி, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப் பெண் அளித்து தேர்வு செய்யும் முறை)ஆசிரியர்களை தேர்வு செய் வதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதித்தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போது ஒன்றும் சொல்ல இயலாது’’ என்று தெரிவித்தனர்.